கம்பராமாயணம் 8687 · யுத்த 21.200

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கருணையால் பிறந்தான் -(உயிர்கள் மீது வைத்த) பெரும் கருணை காரணமாக அவதரித்து வந்தவனாகிய இராமபிரான்; ஒரு நாழிகை உயிர்த்திலன் - ஒரு நாழிகைப் பொழுதளவும் மூச்சு விட்டிலன்; ஒன்றும் உணர்ந்திலன், - ஒன்றும் உணர்ந்தானில்லை; உடல் வியர்த்திலன் - உடல் வியர்வை கொள்ளவும் இல்லை; கண் இணை விழித்திலன் - இரு கண்களும் திறக்கவும் இல்லை; அங்கையும் தாளும் பெயர்த்திலன் - அழகிய கைகளும் கால்களும் நிலைபெயர்த்து அசைத்திலன்; உயிர் பிரிந்திலன்- (ஆனால்) உயிர்மட்டும் நீங்கப் பெறாதவனாயினான்; விண்ணோர் “அயிர்த்து இலன்கொல்?” என்று அஞ்சினர் - (அந்நிலையில்) தேவர்கள் (அப்பிரான்) 'உயிரொடுங்கினானோ' என அச்சமுற்றனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. For a full nāḻikai he did not breathe; he knew nothing;
  2. his body did not sweat; his two eyes did not open; the gods,
  3. in doubt, were afraid, "Is he gone?"; his lovely hands and his feet
  4. did not stir; yet life did not leave him, who was born of compassion.

What the poem says

Irāmaṉ lies unconscious for about twenty-four minutes, without breath, movement or sweat. The gods fear he is dead.

He is still alive. The verse calls him the one born out of compassion, since Viṣṇu came to earth as Irāmaṉ out of mercy for all beings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uyirttilaṉ oru nāḻikai; uṇarntilaṉ oṉṟum;
viyarttilaṉ uṭal; viḻittilaṉ kaṇ iṇai; viṇṇōr
ayirttu, 'ilaṉ kol? 'eṉṟu añciṉar; aṅkaiyum tāḷum
peyarttilaṉ; uyir pirintilaṉ karuṇaiyāl piṟantāṉ.