கம்பராமாயணம் 8688 · யுத்த 21.201

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாங்குவார் இல்லை - (அங்கு இராமபிரானை) தாங்கிக் கொள்வார் எவரும் இலர்; தம்பியைத் தழீஇக்கொண்ட - தம்பியாகிய இலக்குவனைத் தழுவிக் கொண்டுள்ள; தடக்கை வாங்குவாரில்லை - (இராமனது) பெரிய கையினை (ப்பிரித்து) வாங்கி எடுப்பவர் ஒருவரும் இலர்; வாக்கினால் தெருட்டுவார் இலர் - தேறுதல் மொழிகளால் தேற்றுவாரும் இலர்; பாங்கர் ஆயினார் யாவரும் பட்டனர் - (அவனுக்கு) அணுக்கராயுள்ளோர் அனைவரும் இறந்துபட்டனர்; பட்டதீங்குதான் இது - (அவனுக்கு) உண்டாகிய துன்பம் இத்தகையது, தமியனை யார் துயர் தீர்ப்பார்? - (உற்றார் உறவினர் எவருமின்றித்) தனிப்பட்டவனைத் துன்பம் தவிர்ப்பவர் எவர் உளர்?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There was no one to hold him up; the great arm that clasped his brother
  2. there was no one to draw away; no one to comfort him with words;
  3. all who had stood by his side had fallen; such was the harm
  4. that had befallen him; who will ease the grief of one left all alone?

What the poem says

Irāmaṉ lies holding his brother in his arms, and there is no one to lift him up, separate them or comfort him. Everyone who stood by him has fallen.

The poet asks who can ease the sorrow of someone left so completely alone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṅkuvār illai; tampiyait taḻīikkoṇṭa taṭak kai
vāṅkuvār illai; vākkiṉāl teruṭṭuvār illai;
pāṅkar āyiṉār yāvarum paṭṭaṉar; paṭṭa
tīṅkutāṉ itu; tamiyaṉai yār tuyar tīrppār.