கம்பராமாயணம் 8689 · யுத்த 21.202

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கவந்த பந்தமும், கழுதும், தம் கணவரைக் காணார்
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்,
உவந்த சாதகர் ஈட்டமும், ஓரியின் ஒழுக்கும்,
நிவந்த; அல்லது பிறர் இல்லை, களத்திடை நின்றார்.

பொருள் · Meaning in Tamil

கவந்த பந்தமும், கழுதும்- தலையற்ற உடம்புகளின் தொகுதியும், பேயும்; தம் கணவரைக் காணார் - தம்முடைய கணவரைக் காணப் பெறாமையால்; சிவந்த கண்ணியர் - துயரத்தால்) சிவப்பேறிய கண்களை உடையவராய்; தேடினர் திரிபவர் திரளும் - தேடி அலைபவராகிய மகளிர் கூட்டமும், உவந்த சாதகர் ஈட்டமும் - (தமக்கு உணவாகும் பிணங்களின் மிகுதிகண்டு) மகிழ்ச்சி கொண்ட பூதங்களின் தொகுதியும்; ஓரியின் ஒழுங்கும் - நரிகளின் வரிசையும்; நிவந்த அல்லது - மிகுந்து காணப்பட்டனவல்லாமல்; களத்திடை நின்றார் பிறர் இல்லை - (அப்) போர்க்களத்தின் கண்ணே உயிரோடு நின்றவர் பிறர்யாரும் இல்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Heaps of headless trunks, and ghouls, and throngs of women
  2. who wandered searching, eyes reddened, not finding their husbands,
  3. gleeful crowds of goblins, and lines of jackals —
  4. these were everywhere; besides them, no one else was standing on that field.

What the poem says

The battlefield is desolate. The only things moving are headless trunks, ghouls, rākṣasa women searching with red eyes for their dead husbands, goblins happy at the feast of corpses, and lines of jackals.

No living warrior is left standing besides the stricken Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kavanta pantamum, kaḻutum, tam kaṇavaraik kāṇār
civanta kaṇṇiyar tēṭiṉar tiripavar tiraḷum,
uvanta cātakar īṭṭamum, ōriyiṉ oḻuṅkum,
nivanta; allatu piṟar illai, kaḷattiṭai niṉṟār.