கம்பராமாயணம் 8690 · யுத்த 21.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வானநாடியர் - (இராமனின் துயரங்கண்ட) வானவர் நாட்டு மகளிர்; வயிறு அலைத்து அழுது - தம் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுது; மழைக்கண் நீர் - (மேகம் போன்ற) கரிய கண்ணின் நீரை; சோனை மாரியின் சொரிந்தனர் - விடா மழையினுடைய மேகம் போலச் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார் - தேவர்களும் மனம் சோர்வுற்று வருந்தினர்; எவையும் ஞான நாயகன் உருவமே ஆதலின் - எல்லாப் பொருள்களும் ஞானப் பொருளாம் இறைவனாகிய திருமாலின் வடிவங்களே ஆதலின்; ஏனை நிற்பவும் திரிபவும் - ஏனைய நிற்பனவும் நடப்பனவுமாகிய எல்லா உயிர்களும்; நடுங்கி இரங்க - (அவ்விராமனைப் போலவே) நடுங்கி வருத்தமுற்றன.
நிற்பனவும், நடப்பனவுமாகிய எல்லா உயிர்களையும் தன் உடம்பாகக் கொண்டு எள்ளுக்குள் எண்ணெய்போல நிற்பவன் இறைவன். எனவே அவன் துயருற்று வருந்திய காலத்து அவ்வுயிர்களும் அவனைப் போலவே வருந்தா நின்றன என்பதாம். திருவிளையாடல் புராணத்தில், மண் சுமந்த படலத்துப் பாண்டியனின் பிரம்படி சிவபெருமான் மேல் பட்ட போதும், மகாபாரதத்தில் (வில்லிபாரதம்) அருச்சுனனின் வில்லடி அப்பெருமான் மீது பட்ட காலத்தும், எல்லா உயிர்களும் அவ்வடிகளைப் பெற்றனவாகக் கூறப்படுதல் காண்க. எல்லாப் பொருள்களிடத்தும் இறைவன் சர்வாந்தர்யாமியாய் உள்ளான் என்ற வைணவ தத்துவம் இங்கு குறிக்கப்பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The women of heaven beat their breasts and wept, their eyes' water
- pouring down like a ceaseless rain; the gods too sank in grief;
- and all other things, those that stand and those that move, grieved and trembled,
- since everything is the very form of the Lord of wisdom.
What the poem says
All creation mourns with Irāmaṉ. The heavenly women weep and the gods are downcast. Every being, moving or still, trembles with grief, because the Lord lives within everything as its inner self, like oil within sesame seed.
The commentary gives parallels. When the Pāṇṭiya king's cane struck Śiva in the Tiruviḷaiyāṭal Purāṇam, every creature felt the blow, and the same happened when Arjuna's bow struck Śiva in the Tamil Mahābhārata. It says the verse expresses the Vaiṣṇava teaching that God dwells within all things.