கம்பராமாயணம் 8691 · யுத்த 21.204
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முகையின் நாள் மலர்க் கிழவற்கும்- மொட்டாகவில்லாமலே புதிதாக மலர்ந்தது போன்ற (திருமாலின் உந்திக்கமலமாகிய) தாமரையில் வசிப்பவனாகிய பிரமனுக்கும்; முக்கணான் தனக்கும் - மூன்று கண்களை உடையவனாகிய உருத்திர மூர்த்திக்கும்; கருணையும் நலிந்த - (இராமன் படுகின்ற துயரத்தைக் கண்ணுற்றதால் ஏற்பட்ட) இரக்கத்தினால் விளைந்த வருத்தத்தினால்; திருமுகம் நகையும் நீங்கிய - திருமுகங்கள் மகிழ்ச்சியாக மலர்ச்சியின் நீங்கி வாட்டமுற்றன; தொகையுள் நின்றவர்க்கு - (முப்பத்து முக்கோடி என்னும்) எண்ணின் அளவினை உடையவராய் நின்ற (ஏனைய) தேவர்களுக்கு; உள்ளது சொல்லியென்? - நேர்ந்த துன்பநிலையினைச் சொல்லி யாது பயன்? தொடர்ந்த பகையும் பார்க்கின்ற பாவமும் - தொடர்ந்துள்ள பகைமையுடன் (அத்துயரைக்) கண்ணுறுகின்ற பாவத்திற்குரிய தேவதையும்; பரிவால் கலுழ்ந்தது - (தன்னிலைமறந்து) இரக்கத்தினால் கண்ணீர் விட்டு அழுதது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For the lord of the fresh flower that blooms without a bud, and for the Three-Eyed one,
- their holy faces lost their smiles, worn down by pity;
- what need to speak of those who stand among the numbered host? Even
- long-standing enmity, and Sin that watched, wept out of compassion.
What the poem says
Even the highest gods grieve. Brahmā, who sits on the lotus growing from Viṣṇu's navel, and three-eyed Śiva lose their smiles. The other gods, counted as thirty-three crores, need not even be mentioned.
Even enmity, and the spirit of Sin watching Irāmaṉ's suffering, are moved to tears.