கம்பராமாயணம் 869 · பால 13.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காரணம் இன்றியேயும் - காரணம் எதுவும் இல்லாமல்; கனல் எழ விழிக்கும் - நெருப்புப் பொறி பறக்க விழிக்கும்; கண்ணார் - கண்களையுடையவரும்; வீரம் வேத்திரத்தார் - வீரம் தோன்றும் பிரப்பங்கோலை ஏந்தியவர்களும்; தாழ்ந்து விரிந்த - பாதம்வரை தாழ்ந்து பரவிய; கஞ்சுகத்து மெய்யார் - சட்டையைத் தரித்த உடம்புடைய கஞ்சுக மாக்கள்; தார் அணி புரவிமேலார் - கண்ணெி மாலை யணிந்த குதிரைகளின் மேல் இருப்பவர்களும்; தலத்து உளார் - தரையில் நடப்பவர்களும்; கதித்த சொல்லார் - பிறரை வருத்தும் கடுஞ்சொற்களை யுடையவருமாகி; ஆர் அணங்கு அனைய - தெய்வப் பெண்களையொத்த; மாதர் - மகளிரின்; அடி - பாதங்களை; முறை - முறைப்படி; காத்துப் போனார் - பாதுகாத்துச் சென்றார்கள்.
கனல் விழிக்கும் கண் முதலியவற்றையுடைய கஞ்சுக மாக்கள் குதிரைமேல் இவர்ந்தும், தரையில் நடந்தும் அரசன் தேவியருக்குக் காவலாகச் சென்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With eyes that glare as if shooting fire even without any cause,
- bearing the heroic cane, their bodies clad in long, loose, flowing coats,
- some on garlanded horses, some on foot, harsh of speech,
- they went guarding, in due order, the steps of the women who were like rare goddesses.
What the poem says
The royal women are escorted by the palace chamberlains, stern officials in long coats reaching to their feet, carrying canes as their badge of office.
Some ride and some walk; they glare fiercely at everyone for no particular reason and speak harshly, keeping all others away from the queens and their ladies as they travel.