கம்பராமாயணம் 870 · பால 13.66

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விரி மணித் தார்கள் - விரிந்த கிண்கிணி மாலைகளை; பூண்ட - அணிந்த; வேசரி வெரிநில் - கோவேறு கழுதைகளின் முதுகில்; தோன்றும் - காணப்படுகின்ற; அரி மலர்த்தடங்கண் - செவ்வரி பரந்த தாமரை போன்ற விசாலமான கண்களையுடைய, நல்லார் - பெண்கள்; ஆயிரத்து இரட்டி சூழ - இரண்டாயிரவர் (தன்னைச்) சூழ்ந்து வர; இருவரைப் பயந்த நங்கை - (இலக்குமணன் சத்துருக்கனன் ஆகிய) இருவரையும் மக்களாகப் பெற்ற சுமித்திரை; கொண்டலின் மின் - மேகத்தில் தோன்றும் மின்னல்; இது என்ன - இவ் உருவம் என்று பார்த்தவர் கருதும்படி; குருமணி சிவிகைதன்மேல் - நீல இரத்தினம் இழைக்கப் பெற்ற பல்லக்கின்மேல்; யாழ் இசை முரல - யாழ் இசை ஒலிக்க; போனாள் - சென்றாள்.

நீலமணிப் பல்லக்கில் இருக்கும் சுமித்திரைக்கு மேகத்தில் தோன்றும் மின்னல் உவமையாயிற்று. பல்லக்கில் சுமித்திரை செல்ல, மங்கையர் இரண்டாயிரவர் கோவேறு கழுதையின் மேல் சென்றனர் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seen on the backs of mules that wore spreading strings of jewelled bells,
  2. women of wide, red-streaked, flower-like eyes, twice a thousand of them, surrounding her,
  3. on a palanquin of deep-hued gems, so that she seemed lightning in a cloud,
  4. the lady who bore two sons went along to the music of the lute.

What the poem says

Next comes Cumittirai, mother of Ilakkuvaṉ and Catturukkaṉaṉ. She rides in a palanquin set with dark blue sapphires, and seated in it she flashes like lightning in a dark cloud.

Two thousand of her ladies ride around her on mules hung with bells, while lutes play.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viri maṇit tārkaḷ pūṇṭa vēcari verinil tōṉṟum
ari malart taṭaṅ kaṇ nallār āyirattu iraṭṭi cūḻak,
kuru maṇic civikaitaṉmēl, koṇṭaliṉ miṉ itu eṉṉa,
iruvaraip payanta naṅkai yāḻ icai muralap pōṉāḷ.