கம்பராமாயணம் 871 · பால 13.67

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்ணுங்கால் - ஆராயுமிடத்து; இவ் எழுதிரை - இந்த ஏழு கடல்களால் சூழப்பெற்ற; வளாகம் தன்னில் - மண்ணுலகத்தில்; இங்கு அலது - இந்த இடத்தில் (அயோத்தி) அல்லாமல்; மங்கையர் இல்லை - பெண்கள் வேறு இடத்தில் இல்லை; என்ன - என்று (கண்டவர்) கருதுமாறு; (பெருந்திரளாக); மடந்தையர் - மகளிர்; செங்கையில் - தம்முடைய அழகிய கையில்; மஞ்ஞை அன்னம் - மயிலும் அன்னமும்; சிறுகிளி - சிறிய கிளியும்; பூவை பாவை - நாகணவாய்ப் பறவையும் பாவைகளும்; சங்கு உறை கழிந்த அன்ன - உறையிலிருந்து அப்போது தான் எடுத்த சங்குபோன்ற; சாமரை - வெண்மையான சாமரையும்; முதல - முதலியவற்றையும், தாங்கி - தாங்கிக் கொண்டு; மருங்கு - சிவிகையின் அருகில்; போனார் - சென்றார்கள்.

பாங்கியர் சூழச் செல்லும் சுமித்திரையின் தோழியர் தம்முடைய கைகளில் மயில் முதலானவற்றைத் தாங்கிக் கொண்டு உடன் சென்றார்கள் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Carrying in their red hands peacocks, swans, little parrots, mynas and dolls,
  2. and fly-whisks white as conches just drawn from their sheaths, and other such things,
  3. so that, one would think, in all this land ringed by the seven seas,
  4. there were no women anywhere but here, the maidens walked beside her.

What the poem says

Cumittirai's companions walk beside her palanquin carrying her pet peacocks, swans, parrots and mynas, her dolls, and white yak-tail fly-whisks.

There are so many of them that onlookers feel all the women in the world, girdled by its seven seas, must be gathered in this one place.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṅ kaiyil maññai aṉṉam ciṟu kiḷi pūvai pāvai
caṅku uṟai kaḻitta aṉṉa cāmarai mutala tāṅki,
iṅku alatu, eṇṇuṅkāl, iv eḻu tirai vaḷākamtaṉṉil
maṅkaiyar illai eṉṉa, maṭantaiyar maruṅku pōṉār.