கம்பராமாயணம் 872 · பால 13.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெள் எயிறு - வெண்மையான பற்களையும்; இலவச் செவ்வாய் - சிவந்த இலவின் இதழ்போன்ற வாயையும் உடைய; முகத்தை - (கோசலாதேவியின்) முகத்தை; வெண் மதியம் என்று - வெண்மையான நிறைமதி என்று கருதி; கொள்ளையின் சுற்று - (வானிலே) மிகுதியாகச் சுற்றிக் கொண்டிருக்கும்; மீன்கள் குழுமிய அனைய - நட்சத்திரங்கள் ஒன்றாகக் கூடினாற் போல; ஊர்தி - சிவிகையாகிய ஊர்தியிலே; வள்ளலைப் பயந்த நங்கை - இராமனைப் பெற்ற கோசலாதேவி; தெள் அரிப் பாண்டி - தெளிந்த வண்டின் இசை போன்ற பாண்டி என்னும் தக்கேசிப் பண்ணினால்; பாணிச் செயிரியர் - ஆகிய இசைப் பாட்டில் வல்ல பாணர்; இசைத் தேன் சிந்த - இசையாகிய தேனைச் சொரியவும்; வானவர் வணங்க - தேவர்கள் (தன்னை) வணங்கவும்; போனாள் - சென்றாள்.
கோசலையின் முகத்தைச் சந்திரன் என்று கருதி வானெங்கும் உள்ள நட்சத்திரங்கள் ஒன்றாகக் கூடியதுபோலப் பன்னிற மணிகளால் செய்யப்பெற்ற பல்லக்கின்மேல் கோசலை சென்றாள் என்பது. - மயக்க அணியை அங்கமாகக் கொண்ட தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking her face, with its white teeth and lips red as ilavam petals, for the white moon,
- the stars that wheel in their multitudes seemed to have gathered on her carriage;
- while bards skilled in song poured out the honey of music in the clear pāṇṭi mode,
- the lady who bore the bountiful one went on, and the gods bowed down to her.
What the poem says
Last comes Kōcalai, mother of Irāmaṉ. Her palanquin is studded with gems of many colours, which look like a crowd of stars clustering around her face as if they had mistaken it for the moon.
Bards sing for her in the pāṇṭi melodic mode, and even the gods honour her as the mother of the hero.