கம்பராமாயணம் 873 · பால 13.69

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூனொடு குறளும் - கூனர்களும், குறளர்களும்; சிந்தும் - சிந்தர்களும்; சிலதியர் குழாமும் - தோழியர் கூட்டமும்; கொண்ட - ஏறிய; பால் நிறப் புரவி - பால் போன்ற நிறத்தையுடைய குதிரைகள்; அன்னப் புள் என - அன்னப் பறவையைப் போல; பாரில் செல்ல - நிலத்தில் நடந்து போக; தேனொடு - தேன் வண்டுகளும்; மிஞிறும் - மிஞிறுகளும்; வண்டும் - மற்றை வண்டுகளும்; தும்பியும் - தும்பி என்னும் வண்டுகளும்; தொடர்ந்து செல்ல - பின் தொடர்ந்து போக; பூநிறை கூந்தல் மாதர் - மலர்கள் நிறைந்த கூந்தலை யுடைய மகளிர்; புடை - பக்கங்களின்; பிடி நடையில் போனார் - பெண் யானை போன்ற நடையிலே நடந்து சென்றார்கள்.

குறளர்: குள்ளர். சிந்தர்: குறளரைக் காட்டிலும் சிறிது பெரியவர்கள். வண்டும் தேனும் நல்மணமுடைய பூக்களில் படியும்; தும்பியும் மிஞிறும் எல்லா மணத்திலும் செல்லக் கூடியன என்பர் நச்சினார்க்கினியர் (சீவக. 893 உரை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The milk-white horses bearing hunchbacks and dwarfs, little people and troops of maids
  2. moved over the ground like swans;
  3. and, with honey-bees, wasps, bees and beetles following behind,
  4. the women with flower-filled hair walked at the sides with the gait of cow-elephants.

What the poem says

The queens' households follow: the hunchbacks, dwarfs and other small attendants of the inner palace and the troops of maids ride white horses that glide along like swans.

Other women walk at the sides with the slow, swaying gait admired in cow-elephants, followed by swarms of every kind of bee drawn to the flowers in their hair.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṉoṭu kuṟaḷum, cintum, cilatiyar kuḻāmum koṇṭa
pāl niṟap puravi aṉṉap puḷ eṉap pāril cellat,
tēṉoṭu miñiṟum vaṇṭum tumpiyum toṭarntu cellap,
pūniṟai kūntal mātar, puṭai piṭi naṭaiyil, pōṉār.