கம்பராமாயணம் 874 · பால 13.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முகிழ் மென் கொங்கை - தாமரை அரும்பு போன்ற மெல்லிய தனங்களை யுடையவரும்; செப்ப அரு திருவின் நல்லார் - சொல்ல முடியாத படி திருமகளைக் காட்டிலும் அழகுள்ளவர்களும்; முப்பதிற்று இரட்டி ஆயிரம் - அறுபதினாயிரம் என்னும் எண்ணை; கொண்ட - கொண்டவர்களும்; தெரிவையர் - ஆகிய மகளிர்; துப்பினின் - பவளங்களினாலும், மணியின் - இரத்தினங்களினாலும்; பொன்னின் - பொன்னாலும்; சுடர் மரகதத்தின் - ஒளி விடுகின்ற மரகதத்தாலும்; முத்தின் - முத்துக்களாலும்; ஒப்பு அற அமைத்த - (தமக்கு வேறு பொருள்) நிகரில்லை என்னுமாறு இயற்றப்பட்டுள்ள; வையம் - வண்டியில், ஓவியம் புகழ ஏறி - சித்திரம் புகழ்ந்து கூறுமாறு ஏறி; சூழப் போனார் - (அந்தக் கோசலையை) சூழ்ந்து சென்றார்கள்.
அறுபதினாயிர மங்கையர் பலவகை வண்டிகளில் ஏறிக் கொண்டு கோசலையைச் சூழச் சென்றார்கள் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mounted in carriages made beyond compare of coral, gems, gold,
- glowing emerald and pearl, carriages that even painting would praise,
- sixty thousand women with tender, budding breasts,
- lovelier than the goddess of fortune beyond telling, went along surrounding her.
What the poem says
Kōcalai is surrounded by sixty thousand women, more beautiful than Ilakkumi herself, riding in carriages built of coral, gems, gold, emerald and pearl, so finely made that a painter would envy them.
The number echoes the sixty thousand men who carried Civaṉ's bow at the start of the previous chapter.