கம்பராமாயணம் 875 · பால 13.71

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செவிவயின் அமிர்த கேள்வி தெவிட்டினார், தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார், ஐயிரு கோடி சூழக்,
கவிகையின் நீழல், கற்பின் அருந்ததி கணவன், வெள்ளைச்
சிவிகையின், அன்னம் ஊரும் திசைமுகன் என்னச், சென்றான்.

பொருள் · Meaning in Tamil

கற்பின் அருந்ததி கணவன் - கற்புடைய அருந்ததிக்குக் கணவனான வசிட்ட முனிவன்; செவி வயின் - (தம்) செவி மூலமாக; அமுதக் கேள்வி - அமுதம் போல் இனிய நூற் கேள்விகளை; தெவிட்டினார் - தெவிட்டும் அளவிற்கு மிகுதியாகக் கேட்டவர்களும்; தேவர் நாவின் - தேவர்கள் நாவினால்; அவிகையின் - சுவைக்கின்ற அவிசைத் தம் கைகளால்; அளிக்கும் நீரார் - கொடுக்கும் இயல்புடைய அந்தணர்களும்; ஆயிரங்கோடி சூழ - ஆயிரவர் தன்னைச் சுற்றிவர; கவிகையின் நீழல் - குடை நிழலிலே; வெள்ளைச் சிவிகையின் - வெண்மையான பல்லக்கிலே; அன்னம் ஊரும் - அன்ன ஊர்தியிலே ஏறிச் செல்லும்; திசைமுகன் என்ன - நான்முகன் போல; சென்றான் - போனான்.

அருந்ததி கணவனான வசிட்டன் ஆயிரங்கோடி அந்தணர் சூழக் கவிகையின் நீழலில் வெள்ளைப் பல்லக்கில் நான்முகனைப் போலச் சென்றான் என்பது. ஆயிரங்கோடி - பலர் வெள்ளைச் சிவிகையில் செல்லும் வசிட்டனுக்கு வெள்ளையன்னத்தில் செல்லும் நான்முகன் ஊர்தியாலும் தொழிலாலும் ஒப்பாவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Surrounded by a thousand crores of men who had drunk their fill of nectar-sweet learning through the ear
  2. and whose nature is to offer with their hands the oblations the gods taste with their tongues,
  3. in the shade of a parasol, the husband of chaste Aruntati
  4. went in a white palanquin, like the four-faced god who rides the swan.

What the poem says

The royal priest Vaciṭṭaṉ, husband of Aruntati, the model of wifely chastity, rides in a white palanquin under a parasol, surrounded by countless Brahmins, men deeply learned in scripture who make the offerings that feed the gods.

He looks like Piramaṉ, the four-faced creator, riding his white swan: alike in the white carriage, and alike in their sacred calling.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cevi vayiṉ amirtak kēḷvi teviṭṭiṉār, tēvar nāviṉ
avi kaiyiṉ aḷikkum nīrār, āyira kōṭi cūḻak,
kavikaiyiṉ nīḻal, kaṟpiṉ aruntati kaṇavaṉ, veḷḷaic
civikaiyil, aṉṉam ūrum ticaimukaṉ eṉṉac, ceṉṟāṉ.