கம்பராமாயணம் 876 · பால 13.72

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொரு களிறு - போர் செய்வதற்கான யானைகளும்; இவுளி பொன்தேர் - குதிரைகளும் அழகிய தேர்களும்; பொலங் கழல் குமரர் - பொன்னாலான வீரக் கழல் பூண்ட காளையரும், முந்நீர் அருவரை - கடத்தற்கரிய மலையைக் கடலானது; சூழ்ந்தது என்ன - சூழ்ந்தாற் போல; அருகு முன் பினும் செல்ல - (தமக்குப்) பக்கமாக முன்னும் பின்னும் செல்ல; திருவளர் மார்பர் - வீரலக்குமி தங்கிய மார்பையுடையவர்களும்; தெய்வச் சிலையினர் - தெய்வீகத் தன்மையுள்ள வில்லை யுடையவர்களும்; தேரர் வீரர் - தேர்களையுடையவரும், வீரர்களுமாகிய; இருவரும் - (பரத - சத்துருக்கன்) இருவரும்; முனிபின் போன - (விசுவாமித்திர) முனிவன் பின்னே சென்ற; இரு வரும் என்ன - (இராம லக்குவர் என்ற) இருவரும் போல; போனார் - (வசிட்ட முனிவன்) பின்னே சென்றார்கள்.

அருவரை பரத சத்துருக்கனர்களுக்கும், கடல் நால்வகைப் படைகளுக்கும் உவமையாம். வசிட்டன் பின்னே செல்லுகின்ற பரத - சத்துருக்கனர்களுக்கு விசுவாமித்திரன் பின்னே சென்ற இராமலக்குமணர் உவமையாவர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With fighting elephants, horses, golden chariots and princes in golden anklets
  2. moving beside them, before and behind, as the ocean surrounds a mighty mountain,
  3. the two whose chests were the home of fortune, bearing divine bows, heroes in chariots,
  4. went like those other two who had gone after the sage.

What the poem says

Behind Vaciṭṭaṉ ride the two younger princes, Paratan and Catturukkaṉaṉ, with their bows, surrounded by elephants, horses, chariots and young warriors as a great mountain is ringed by the sea.

Following the family sage, they look just like Irāmaṉ and Ilakkuvaṉ when they followed Vicuvāmittiraṉ out of Ayōttī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poru kaḷiṟu ivuḷi poṉ tēr polaṅ kaḻal kumarar, munnīr
aru varai cūḻntatu eṉṉa, arukupiṉ muṉṉum cellat,
tiru vaḷar mārpar, teyvac cilaiyiṉar, tērar, vīrar,
iruvarum muṉi piṉ pōṉa iruvarum eṉṉap pōṉār.