கம்பராமாயணம் 877 · பால 13.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முத்து - முத்துக்களினாலும்; அணிவயிரம் - அழகிய வயிர மணிகளாலும்; பூணான் - இயன்ற அணிகளைப் பூண்டவனான தசரதன்; நித்திய நியமம் முற்றி - (தன்) நித்தியக் கடமைகளை முடித்துவிட்டு; நேமியான் பாதம் - சக்கரம் ஏந்திய திருமாலின் பாதங்களை; சென்னி வைத்தபின் - (தன்) முடியிலே வைத்த பின்பு; (குலதெய்வமான திருமாலை வணங்கின பின்னர்); மறை வல்லோர்க்கு - வேதங்களில் வல்ல அந்தணர்களுக்கு; வரம்பு அறு - எல்லையற்ற, மணியும் பொன்னும் - இரத்தினமும் பொன்னும்; பத்தி ஆன் நிரையும் - வரிசையான பசுக் கூட்டங்களையும்; பாரும் - பூமியையும்; பரிவுடன் - மன மகிழ்ச்சியோடு; நல்க - தானம் செய்து; மங்கலம் முகிழ்த்த - மங்கலம் மலர்ந்த; நன்னாள் - நல்ல நாளில்; போனான் - புறப்பட்டுச் சென்றான்.
அரசர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் இரத்தினம், பொன், பசு, பூமி முதலியன தானம் செய்தல் மரபு. திருவடியைச் சென்னியில் வைத்தல் என்பது வீழ்ந்து வணங்குதலாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having completed his daily rites and placed upon his head
- the feet of the Lord of the discus, he gave gladly to those learned in the Vedas
- gems and gold without limit, rows of cattle and land, and set out,
- he of the pearl and diamond ornaments, on that good day of the auspicious hour.
What the poem says
Finally Tacarataṉ himself departs. He performs his daily religious duties, bows before Tirumāl, the family deity, and, as kings customarily did before a journey, gives the Brahmins gems, gold, herds of cattle and land.
Then, at an auspicious moment on a lucky day, he sets out for Mithilā.