கம்பராமாயணம் 878 · பால 13.74

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இரு பிறப்பாளர் எட்டு ஆயிரர் மணிக் கலசம் ஏந்தி,
அருகு மறை வருக்கம் ஓதி, அறுகுநீர் தெளித்து, வாழ்த்தி,
வரன் முறை வந்தார் ; கோடி மங்கல மழலைச் செம்மை வாய்
பரும் மணி கலாபத்தார், பல்லாண்டு இசை பரவப் போனான்.

பொருள் · Meaning in Tamil

இருபிறப்பாளர் எண்ணாயிரர் - எண்ணாயிரம் அந்தணர்கள்; மணிக் கலசம் ஏந்தி - இரத்தின கும்பங்களைக் கையில் ஏந்திக் கொண்டு; அருமறை - உணர்வதற்கு அரிய வேதமந்திரங்களின்; வருக்கம் ஓதி - தொகுதிகளை ஓதிக் கொண்டு; அங்கை நீர் தெளித்து - (தம்) கையால் கலச நீரைத் தெளித்து; வாழ்த்த - வாழ்த்துக் கூறவும்; மங்கல மழலைச் செவ்வாய் - மங்கலமான மழலைச் சொல்லைப் பேசும் சிவந்த வாயையும்; பருமணிக் கலாபத்தார் - பருத்த மாணிக்கங்களாலான மேகலையையும் உடையவர்களாகிய; வரன்முறை வந்தார் - பரம்பரையாக அரசருக்குப் பல்லாண்டு பாடும் குலத்தில் பிறந்தவர்களான; கோடி - கோடிக்கணக்கான பெண்கள்; பல்லாண்டு இசை பரவ - பல்லாண்டை இசையோடு பாடிவரவும், போனான் - சென்றான்.

தசரதன் செல்லும்போது அந்தணர் வேத மந்திரங்களைச் சொல்லிக் கலச நீர் தெளித்து வாழ்த்த, மங்கையர் பலர் பல்லாண்டு பாடினர். இரு பிறப்பாளர் - உபநயனத்திற்குமுன் ஒரு பிறப்பும், உபநயனத்தின்பின் ஞானப் பிறப்பான மற்றொரு பிறப்பும் ஆகிய இரு பிறப்புடையவர் அந்தணர். மணிக் கலசம் - பூரண கும்பம் - மங்கலத்திற்காகப் பூரண கலசம் எடுத்தல் மரபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Eight thousand twice-born men, bearing jewelled pitchers,
  2. chanting the sections of the rare Veda, sprinkling water with aṟuku grass and blessing him,
  3. and a crore of women of the hereditary line, with red lips lisping auspicious words
  4. and girdles of large gems, singing 'Many years!' in his praise: so he went.

What the poem says

Tacarataṉ's departure is blessed. Eight thousand Brahmins, the "twice-born", carry full jewelled pitchers, the traditional sign of good fortune, chant Vedic verses and sprinkle him with water.

Countless women from the families whose hereditary role is to sing the royal benediction chant "Many years!", the blessing of long life, as he goes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irupiṟappāḷar eṇṇāyirar maṇik kalacam ēnti,
aru maṟai varukkam ōti, aṟuku nīr teḷittu, vāḻtti,
varaṉmuṟai vantār; kōṭi maṅkala maḻalaic cev vāyp
paru maṇik kalāpattār, pallāṇṭu icai paravap pōṉāṉ.