கம்பராமாயணம் 8694 · யுத்த 21.207

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய், என்னை இகந்தாய், புகழ் பாராய்,
நீயோ; நானும் நின்றனன்; நெஞ்சம் வலியேனோ!

பொருள் · Meaning in Tamil

தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே; - (எனக்குத்) தாயும் நீயே; தந்தையும் நீயே; தவமும் நீயே; சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே- மைந்தனும் நீயே; தம்பியும் நீயே; செல்வமும் நீயே; புகழ் பாராய், என்னை இகந்தாய் போயோ நின்றாய் - (இத்தகைய) நீயோ புகழைக் கருதாமல் என்னை (த்தனியே) விடுத்து (உயிர்துறந்து) சென்றாய்; நீயோ; யானோ; - (இங்ஙனம் எனக்கு எல்லாமாகவும் இருந்தும் என்னைத் தனித்துக் கதறவிடுத்துச் சென்ற வன்னெஞ்சத்தால்) நீயே, (அல்லது இங்ஙனம் எல்லாமாகவும் எனக்கிருந்த உன்னை இழந்தும் உயிரோடிருக்கும் வன்னெஞ்சத்தால்) யானோ; நின்னினும் நெஞ்சம் வலியேனோ -(ஆராய்ந்து பார்த்தால்) உன்னைக் காட்டிலும் (எனக்காக உயிருங்கொடுத்த உன் செயலின் முன்) யானே வன்னெஞ்ச முடையேன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "You were my mother; you were my father too; you were my penance;
  2. you were my son; you were my brother too; you were my fortune;
  3. and you have gone and left me, heedless of fame —
  4. you, or I? Is it not I whose heart is harder even than yours?"

What the poem says

Ilakkuvaṉ was everything to Irāmaṉ: mother, father, son, brother, his spiritual practice and his wealth. Yet he has gone and left Irāmaṉ alone.

Irāmaṉ asks which of them is the harder-hearted, Ilakkuvaṉ for leaving or himself for staying alive after losing him. He decides that he is, since Ilakkuvaṉ gave his life for him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāyō nīyē; tantaiyum nīyē; tavam nīyē;
cēyō nīyē; tampiyum nīyē; tiru nīyē;
pōyō niṉṟāy, eṉṉai ikantāy, pukaḻ pārāy,
nīyō; yāṉē niṉṉiṉum neñcam valiyēṉō!