கம்பராமாயணம் 8696 · யுத்த 21.209
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
படர்கானத்துப் பயிலும் - பரவிய இடமகன்ற காட்டினிடத்தே பழகிவாழும்; காலம் பத்தொடு நாலும் - பதினான்கு ஆண்டு காலத்தில், அயில்கின்றேனுக்கு - (உணவினை உண்கின்றவனாகிய எனக்கு, ஆவன நல்கி அயிலாதாய் - பொருந்துவனவாகிய உணவுகளைத் (தேடித் தந்து (நீமட்டும்) உண்ணாதிருந்தவனே! வெயில் என்று உன்னாய்- வெயில் என்று கருதாத நீ; நின்று தளர்ந்தே மெலிவு எய்தி - (எனக்குத் துணையாக) நின்று தளர்ச்சியுற்று மெலிவினை அடைந்து; இன்று துயில்கின்றாயோ - இப்பொழுது உறங்குகின்றாயோ? இவ்வுறக்கம் துறவாயோ - இவ்வுறக்கத்தினை விட்டு எழமாட்டாயோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Through the fourteen years we lived in the spreading forest,
- you gave me, who ate, all that I needed, and did not eat yourself!
- You never thought of the sun's heat, standing guard until you grew faint; now, worn out,
- are you sleeping today? Will you not give up this sleep?"
What the poem says
Irāmaṉ remembers the years of exile. Through all fourteen years in the forest Ilakkuvaṉ found food for Irāmaṉ but went without himself, and stood guard in the burning sun until he was exhausted.
Irāmaṉ asks whether he has finally fallen asleep from tiredness, and begs him to wake up.