கம்பராமாயணம் 8697 · யுத்த 21.210
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அயிரா நெஞ்சும் ஆவியும் - ஐயுறவு கொள்ளாத தெளிந்த நெஞ்சமும் உயிரும்; ஒன்றே எனும் அச்சொல் - (தம்முட்பிரிவின்றி ஒன்றிக் கலந்திருத்தலால்) ஒன்றே என (உலகோர்) கூறும் அம்மொழி; பயிரா எல்லை - பொருளுள்ளதாக ஆகாதபோது; பாதகனேற்கும் பரிவு உண்டோ - பாவியாகிய என்னிடம் இரக்கம் என்ற உணர்வுதான் நிகழுமோ; செயிரோ இல்லா - ஒரு குற்றமும் இல்லாத; உன்னை இழந்தும் திரிகின்றேன் - உன்னை இழந்தபின்பும் (வருத்தமின்றித்) திரியும் நிலையினனாக உள்ளேன்; ஐயா! இனி உன்னோடு உறவு - ஐயனே! இனி உன்னுடன் (உண்மையான) உறவு; உயிரோ, நானோ, ஆர் - (எனது) உயிரோ, யானோ யார்?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "That saying, 'A heart free of doubt and the life are one' —
- since it has not come true, can a sinner like me know any pity?
- Having lost you, in whom there was no fault, I still go about;
- my life, or I — which of us, my lord, is now your kin?"
What the poem says
People say that a loving heart and life are one, so that losing the beloved means losing life. Irāmaṉ finds that this is not true in his case, which proves to him that he has no real feeling.
He has lost his faultless brother and yet goes on living. He asks whether his life or he himself can still be called Ilakkuvaṉ's kin.