கம்பராமாயணம் 8702 · யுத்த 21.215

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை வைக்க,
ஆன்றோர் சொல்லும் நல்லறம், அன்னான் வயமானால்,
மூன்றாய் நின்ற பேருலகு, ஒன்றாய் முடியாவேல்,
தோன்றாவோ, என் வில் வலி, வீரத் தொழில் அம்மா?

பொருள் · Meaning in Tamil

சான்றோர் மாதை - சான்றோர்களால் பாராட்டத்தகும் (கற்பென்னும் திண்மையையுடைய) பெண்ணை; தக்க அரக்கன் - அரக்கத் தன்மைக்குச் சான்றாக நிற்கும் அரக்கன்; சிறைதட்ட - சிறைப்படுத்தி வைக்க; ஆன்றோர் சொல்லும் நல் அறம் - கொடியவர்களை ஒறுத்தழிக்க வல்ல அறக்கடவுள் உண்டெனச் சான்றோர்களால் சிறப்பித்துக் கூறப்பெறும் நல்லறமும்; அன்னான் வயமானால் - அத்தகைய கொடியவனின் கொடுமைக்கு உட்பட்டு அடங்கிச் செயலற்றுப் போகுமானால்; மூன்றுஆய் நின்ற பேர் உலகு - (மேல், கீழ், நடுஎன மூவகையாய் நிலை பெற்றுள்ள பெரிய உலகங்கள் யாவும்; ஒன்றாய் முடியாவேல் - ஒருசேர அழிந்து போகாமல் இருக்குமானால்; என் வில்வலி வீரத் தொழில் - என்னுடைய வில்லின் வன்மை காட்டும் வீரத் தொழில்; தோன்றாவோ - உலகோர்க்கு நன்கு விளங்கித் தோன்றாதோ?

அம்மா - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When a true rākṣasa holds in prison the woman whom the noble praise,
  2. if the good dharma that the wise speak of falls into the power of such a one,
  3. then unless the great world that stands in three parts ends all together as one,
  4. will the strength of my bow, my deeds as a hero, ever be seen?"

What the poem says

Irāmaṉ's grief turns to fury. A rākṣasa holds the chaste Cītai prisoner. If even dharma, which the wise say destroys the wicked, has fallen under Irāvaṇaṉ's power, Irāmaṉ will have to set it right himself.

Unless he destroys all three worlds, the upper, the lower and the middle, the power of his bow will never be known.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cāṉṟōr mātait takka arakkaṉ ciṟai taṭṭa,
āṉṟōr collum nal aṟam, aṉṉāṉ vayamāṉāl,
mūṉṟu ām niṉṟa pēr ulaku, oṉṟāy muṭiyāvēl,
tōṉṟāvō, eṉ vil vali, vīrat toḻil ammā?