கம்பராமாயணம் 8703 · யுத்த 21.216

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேலைப் பள்ளக்குண்டு அகழிக்கும் - கடற்பள்ளமாகிய ஆழ்ந்த அகழியை (அணைகட்டிக்) கடத்தற்கும்; விராதற்கும்- விராதனைக் கொல்லுதற்கும்; காலின் செல்லாக் கவந்தன் உயிர்க்கும் - கால்கொண்டு நடக்கவியலாத கவந்தனது உயிரைக் கவர்வதற்கும்; கரனுக்கும் - கரன் என்னும்அரக்கனை அழிப்பதற்கும்; மூலப் பொத்தல் செத்த -ஆணிவேரின் கண் துளையுற்று பட்டுப்போன; ஏழ் மரத்து முதலுக்கும் - ஏழு மராமரங்களின் முதலைத் துளைத்தற்கும்; வாலிக்கும்மே - வாலியைக் கொல்லுதற்கும் மட்டுமே; ஆயினவாறு என் வலி அம்மா - ஆகித் தீர்ந்தொழிந்தது எனது வன்மையனைத்தும்! (அந்தோ! இரங்கத்தக்கதே).

“எனது வலிமையனைத்தும் அற்பமாகிய கடற்பள்ளத்தைக் கடப்பதற்கும், விராதன், கவந்தன், கரன் முதலான சாதாரணர்களைக் கொல்லுதற்கும், குறையுடைய மராமரங்களைத் துளையிடுதற்கும், வாலியென்னும் வானரனைக் கொல்லுதற்கு மாகத் தீர்ந்தொழிந்ததே” என இரங்குகின்றான் இராமன். அம்மா வியப்பிடைச்சொல். குண்டு - ஆழம், 'திண்டோர் குழித்த குண்டு நெடுந்தெருவின்' (பெரும்பாண்-397) “அருங் குழுமிளைக் குண்டு கிடங்கின்' (மதுரைக-064) என்பனகாண்க.

காலின் செல்லும்' - என்பதற்குப் பதிலாகக் காலின் செல்லா எனப் பாடங்கொள்ளப் பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "For the deep moat that is the hollow of the sea, and for Virātaṉ,
  2. for the life of Kavantaṉ, who could not go on legs, and for Karaṉ,
  3. for the seven trunks of trees, dead and hollowed at the root,
  4. and for Vālī — that is all my strength came to, alas!"

What the poem says

Irāmaṉ mocks his own past deeds as trivial. He bridged the sea, killed Virātaṉ, the legless Kavantaṉ and Karaṉ, shot an arrow through seven trees that were already hollow, and killed Vālī. His strength, he says, was only good for such small things.

The commentary explains kuṇṭu as 'depth', citing Sangam poems, and notes that it prefers the reading 'who could not go on legs' to 'who went on legs'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vēlaip paḷḷak kuṇṭu akaḻikkum virātaṟkum
kāliṉ cellāk kavantaṉ uyirkkum, karaṉukkum,
mūlap pottal cetta marattu ēḻ mutalukkum,
vālikkummē āyiṉavāṟu eṉ vali ammā!