கம்பராமாயணம் 8704 · யுத்த 21.217

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
"

பொருள் · Meaning in Tamil

வருந்தேன் -வருத்தம் இல்லாதேனாகி, “நீயே வெல்லுதி” என்னும் வலி கொண்டேன் - “நீயே (இந்திரசித்தைப் போரிற் கொன்று) வெற்றியடைவாய்' என்னும் (மன) வலிமையைக் கொண்டு இருந்தேன்; இருந்தேனானால் - (இனி, நின்னை இழந்த இந்நிலையிலும் உயிர்துறவாது) இருந்தேனானால்; இந்திரசித்தே முதலாய பெருந்தேராரை - இந்திரசித்து முதலாகவுள்ள பெரிய தேர் வீரர்களாகிய பகைவர்களை; கொன்று பிழைக்கப் பெறுவேனா? - (போரிற்) கொன்று பிழைத்திருத்தலாகிய ஆற்றலைப் பெறவல்லேனா? நான் பொருந்தேன் - நான், உன்னுடன் பிறந்தேன்” எனக் கூறிக் கொள்ளுதற்கும் பொருத்தமுடையேனல்லேன்; இப்பொய்ப் பிறவிக்கும் பொறை அல்லேன் - (எனவே) இப்பொய்மைத் தன்மையுடைய பிறவியின் சுமையைத் தாங்குதற்கும் வன்மையுடையேனல்லேன்!

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If I live on, shall I be able to kill Intiracittu
  2. and the other great chariot-warriors, and survive?
  3. I never fretted; I had the strength of the thought, 'You will win';
  4. I am not fit to be your brother; I cannot bear even the weight of this false birth!"

What the poem says

Irāmaṉ had never worried about Intiracittu, because he was sure Ilakkuvaṉ would beat him. Without his brother he doubts he can defeat Intiracittu and the other great warriors and live.

He feels unworthy to be called Ilakkuvaṉ's brother, and too weak even to carry the burden of this deceptive human life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iruntēṉāṉāl, intiracittē mutalāya
perun tērāraik koṉṟu piḻaikkap peṟuvēṉō?
varuntēṉ, "nīyē velluti " eṉṉum vali koṇṭēṉ;
poruntēṉ, nāṉ, ip poyp piṟavikkum poṟai allēṉ!