கம்பராமாயணம் 8705 · யுத்த 21.218

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும்,
'ஏது ஆனாரோ 'என்று தளர்ந்தே இறுவாரை,
தாதாய்! காணச் சால நினைந்தே தளர்கின்றேன்;
போதாய், ஐயா, பொன்முடி என்னைப் புனைவிப்பான்!

பொருள் · Meaning in Tamil

தாதாய் - என் அப்பனே! மாதாவும், நம் சுற்றமும் நாடும் மறையோரும் - (நம்மை ஈன்ற) தாயும், நம் சுற்றத்தாரும், நாட்டுமக்களும், வேதியரும்; “ஏது ஆனாரோ?” என்று தளர்ந்தே இறுவாரை - (வனம் போந்தநம்மைக் குறித்து) “என்ன நிலையினராயினாரோ' என்று தளர்வெய்தி (மனம் நொந்து) அழிபவரை; காணச் சால நினைந்தேன் - (அவர்தம் துயர் நீங்க) காணுதற்குப் பெரிதும் எண்ணி நிற்கின்றேன்; ஐயனே! - ஐயனே! என்னைப் பொன்முடி புனைவிப்பான் - என்னைப் பொன்னாலியன்ற முடியைப் புனைவித்தல் வேண்டி; தரை ஆள்வேம் போதாய் - நிலமாள்வதற்கு (மீண்டும் உயிர்பெற்று) வருவாயாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Our mother, our kin, our land and the brahmins,
  2. who are wasting away in grief, asking, 'What has become of them?' —
  3. I longed, my dear one, to see them again; we would rule the land;
  4. come back, my lord, so that you may set the golden crown upon my head!"

What the poem says

Irāmaṉ thinks of home. Their mothers, their family, the people of Ayōttī and the brahmins are all pining and wondering what has happened to the exiles. He had looked forward to going back to them and ruling the kingdom together.

He begs Ilakkuvaṉ to come back to life so that he can be there to crown him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mātāvum, nam cuṟṟamum, nāṭum maṟaiyōrum,
'ētu āṉārō 'eṉṟu taḷarntē iṟuvārai,
tātāy! kāṇac cāla niṉaintēṉ; tarai āḷvēm;
pōtāy, aiyā, poṉ muṭi eṉṉaip puṉaivippāṉ!