கம்பராமாயணம் 8706 · யுத்த 21.219
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாசமும் முற்றச் சுற்றியபோதும் - நாகபாசம் முழுவதும் (உனது உடம்பைச்) சுற்றிய அப்பொழுதும்; பகையாலே நாசமும் முற்ற இப்போதும் - பகைவனாலே (நம் சேனைக்குக்) கேடு முற்றிவிட்ட இப்பொழுதும்; உடன் அல்லேன் நடந்தேன் - உன்னுடன் துணை நிற்பேன் அல்லாதேனாகி (உன்னை விட்டுப்புறத்தே சென்று விட்டேன்; நேசமும் அற்றார் செய்வன செய்தேன் - அன்பில்லாதார் செய்வனவற்றைச் செய்தேன்; நிலைநின்றேன் - (ஆயினும் தளர்ச்சியின்றி நிற்கின்றேன்; என்கொற்ற நலத்தை - (இத்தகைய) எனது வெற்றி நலத்தை; தேசமும் மற்று தெரியாதோ - உலகமும் தெரிந்து கொள்ளாதோ?
பாசம் - இந்திரசித்து ஏவிய நாகபாசம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "When the noose was wound all round you, and now again,
- when ruin from the foe is complete, I had gone off; I was not at your side;
- I did what those without love do; and still I stand here;
- will the world not come to know the worth of my victories?"
What the poem says
Twice Ilakkuvaṉ has been struck down while Irāmaṉ was away: once by the serpent noose, the nāgapāśam that Intiracittu shot earlier, and now by the Brahmā weapon.
Irāmaṉ accuses himself of acting like someone without love, and says bitterly that the world will now see what his 'victories' are worth.