கம்பராமாயணம் 8708 · யுத்த 21.221

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி,
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த,
'பொன்றும் 'என்னாத் தம்பியை மார்பத்தொடு புல்லி,
ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

என்று என்று ஏங்கும் - என்று என்று இவ்வாறு புலம்பி வருந்துவான்; விம்மும் உயிர்க்கும் - மனம் விம்முவான்; பெருமூச்சு விடுவான்; இடைஅஃகிச் சென்று - இடை இடையே (நெட்டுயிர்ப்பு அடங்கிச் சென்று; இந்தியம் எல்லாம் ஒன்றோடு ஒன்று சிதைவு எய்த - (கண்முதலிய) பொறிகளெல்லாம் (தத்தம் புலன்களைக் கொள்ளுதலின்றி) சிதைந்து கெட; பொன்றும் என்னா - 'இறந்தொழிவோம்' என்று; தம்பியை ஆர்வத்தோடு புல்லி - தம்பியை மார்போடு இறுகத் தழுவிக்கொண்டு; ஒன்றும் பேசான், தன்னை மறந்தான், துயில்வுற்றான் - ஒன்றும் பேச இயலாதவனாகி தன்னை மறந்து உறங்கிக் கிடந்தான் (இராமன்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying such things again and again, he moaned, he sobbed, he sighed, his breath failing,
  2. and as all his senses, one after another, broke down,
  3. thinking, "We shall die together," he clasped his brother with longing,
  4. spoke not a word, lost himself, and sank into a swoon.

What the poem says

Irāmaṉ's lament wears itself out. Sobbing and gasping, his senses failing, he holds Ilakkuvaṉ tightly, meaning to die with him.

He falls silent and loses consciousness again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu eṉṟu ēṅkum, vimmum, uyirkkum, iṭai aḵki,
ceṉṟu oṉṟu oṉṟōṭu intiyam ellām citaivu eyta,
'poṉṟum 'eṉṉāt tampiyai ārvattoṭu pulli,
oṉṟum pēcāṉ; taṉṉai maṟantāṉ, tuyil uṟṟāṉ.