கம்பராமாயணம் 8709 · யுத்த 21.222

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'

பொருள் · Meaning in Tamil

விண்ணோர் கண்டார் - (இராமனுற்ற இப்பெருந்துயரை தேவர்கள், கண்டனர்; கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் - (அதனைக் கண்டமைக்காக இரங்கி) தம்முடைய கண்களில் மோதி அறைந்து கொண்டவர்களாய் அழுவாராயினர்; துன்பம் கொண்டார் - (எல்லையற்ற) துன்பத்தினை மேற்கொண்டார்கள்; “என் முடிவு?” என்னாக் குலைகின்றார் - 'முடிவில் நிகழப் போவது யாதோ? ' என அஞ்சி நடுங்குகின்றார்கள்; “அண்டா! ஐயா!” - அண்டம் முழுவதும் ஆனவனே! (எம்முடைய) தலைவனே! உன்பால் துன்பு உண்டோ?” - (இறைவனாகிய) உன்னிடத்துத் துன்பம் என்பது உளதோ? எங்கள் பொருட்டால் அயர்கின்றாய் - (நின் அன்பர்களாகிய) எங்கள் பொருட்டாகவே (இத்தகைய துன்பங்களை மேற்கொண்டு) தளர்ந்து வருந்துகின்றாய்! என அன்பால் உரை செய்தார் - எனச் சொல்லி (அம்முதல்வனிடத்துத் தாம் கொண்ட) பேரன்பினால் பின்வருமாறு கூறினார்கள்.

புடைத்தல் - மோதி அறைதல்; கலுழ்தல் - அழுதல்; குலைதல் - நடுங்குதல்; அண்டா - அண்டம் முழுவதுமாய் நிறைந்து விளங்குபவனே! 'வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும், தானாய எம்பெருமான்' (பெரியதிருமொழி 4-1-3) என்பது திருமங்கையாழ்வார் திருவாக்கு. இறைவன் இன்பதுன்பங்களுக்கு அப்பாற்பட்டவன். எனவே உன்பால் துன்புண்டோ? என வினவுகின்றனர் “இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே” (திருவா. சிவபுராணம்) என்பது மணிவாசகம். தேவர்கள் இராமபிரான் படுகின்ற துயரங்கண்டு ஆற்றாராகி, துன்பமற்ற நீ எங்கள் பொருட்டால் இப்பெருந்துயர் ஏற்றாய் எனத்தாமும் பெருந்துயரெய்தி அப்பிரானுக்குச் சில சொல்லத் தொடங்கினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods saw it; they beat their eyes, and wept;
  2. they were seized by grief, and trembled, asking, "What will the end be?"
  3. "O you who are the whole cosmos! Our lord! It is for our sake that you are worn down;
  4. can there truly be sorrow in you?" so they spoke, out of love.

What the poem says

The gods watching are terrified of what will happen if Irāmaṉ dies. They speak to him with love. He is God, who fills the universe and is beyond joy and sorrow, and he has taken on this suffering only for their sake.

The commentary cites Tirumaṅkai Āḻvār and Māṇikkavācakar on God as the whole world and as beyond joy and grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭār viṇṇōr; kaṇkaḷ puṭaittār, kaluḻkiṉṟār;
koṇṭār tuṉpam, 'eṉ muṭivu? ' eṉṉāk kulaikiṉṟār?
'aṇṭā! aiyā! eṅkaḷ poruṭṭāl ayarkiṉṟāy;
uṇṭō uṉpāl tuṉpu? ' eṉa, aṉpāl urai ceytār.