கம்பராமாயணம் 8710 · யுத்த 21.223
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்ப-துன்பம் இல்லோனே - இன்பமும் துன்பமும் இல்லாதவனே! உன்னை உள்ளபடி அறியோம் - உன் நிலையை உள்ளது உள்ளவாறு அறியும் திறம் அறியமாட்டோம்; உலகை உள்ளதிறம் உள்ளோம் - உலகினை (உள்ளும் புறமும்) நிறைந்துள்ள நின் வியாபகத் தன்மையைச் சிந்தித்துணரும் திறமுடையோம் அல்லோம்; பின்னை அறியோம், முன் அறியோம், இடையும் அறியோம் - முடிவு இதுவென்றறியோம்; முதல் இதுவென்றறியோம்; நடுவும் இதுவென்றறியோம்; நின்னை வணங்கி - (ஆதி அந்தம் நடுவென்றறிய வொண்ணாம் பரமாகிய) நின்னை வழிபட்டு; நீவகுத்த நெறியின் பிறழாமல் - நீ வகுத்தருளிய அற நெறியில் மாறுபடாமல்; நிற்கும் இது அல்லால் - நின்று ஒழுகுதலையின்றி; அடியோம் செயற்பால என்னை? - நின் அடியோங்களாகிய எங்களாற் செய்யத் தக்கனயாவை உள்ளன?
உன்னை உள்ளபடி அறியோம் - “உணர்ந்தார்க்கு உணர்வறியோன்” (திருக்கோவை-9) இறைவனின் வியாபகத் தன்மையை அறிய முடியாமை குறித்து உலகை உள்ளதிறம் உள்ளோம்' எனப்பட்டது. உள்ளோம் - நினைக்கமாட்டோம்.
“திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசை படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடரமிகு சுருதியு விவையுண்ட சுரனே!”
(திருவாய்மொழி - 1-1-7) எனவரும் நம்மாழ்வார் திருவாக்கு இங்கு நினைக்கத் தக்கது. சிற்றறிவாகிய உயிர் பரம்பொருளின் முழுமையை அறியவியலாது. எனவே, அப்பரம்பொருள் வகுத்த வழி பிறழாமல் ஒழுகுதலன்றி வேறொன்றும் செயற்கரியதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "We do not know you as you are; we cannot conceive how you fill the world;
- we do not know the end; we do not know the beginning; nor the middle; unswerving,
- to worship you and keep to the path you have laid down — other than that,
- what is there for us, your servants, to do? O you who have neither joy nor sorrow!"
What the poem says
The gods begin their hymn to Irāmaṉ as the Supreme Being. They cannot know his true nature or how he pervades the world, and they cannot grasp his beginning, middle or end. All they can do is worship him and keep to the path of dharma he has laid down.
The commentary quotes Nammāḻvār's Tiruvāymoḻi on God hidden in every element as life is hidden in the body. A limited soul cannot comprehend the whole of the Supreme.