கம்பராமாயணம் 8711 · யுத்த 21.224

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அரக்கர் குலத்தை வேர் அறுத்து, எம் அல்லல் நீக்கி அருளாய் 'என்று
இரக்க, எம்மேல் கருணையினால், இயையா உருவம் இஃது எய்தி,
புரக்கும் மன்னர் குடிப்பிறந்து போந்தாய்! அறத்தைப் பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடுமாயம் எமக்கும் காட்டக் கடவாயோ?

பொருள் · Meaning in Tamil

அரக்கர் குலத்தை வேர் அறுத்து - (இரக்கமற்றவர்களாகிய) அரக்கரினத்தை வேருடன் அறுத்துக் களைந்து; எம் அல்லல் நீக்கி அருளாய் என்று - எம்முடைய துன்பங்களை நீக்கியருள்வாயாக என்று; இரக்க, எம்மேல் கருணையினால் - (யாம் நின்னைக்) குறையிரந்து வேண்ட, எம்மேல் (நீவைத்த பேரருளால்; ஏயா உருவம் இவை எய்தி - (நினக்கு) பொருந்தாத மானிடவடிவங்களை ஏற்று; அறத்தைப் பொறை தீர்ப்பான் - அறத்தின் (பொறுக்க முடியாத) பாரமாகிய தீமைகளைப் போக்குதற்காக; புரக்கும் மன்னர் குடிப் பிறந்து போந்தாய் - (உலக உயிர்களைக்) காக்கும் மன்னர்குலத்தில் அவதரித்து இங்குவந்தாய்; கரக்க நின்றே நெடுமாயம் - (எமது குறை தீர்க்க வந்த நீ நின் இறைமைத் தன்மை) மறைய நின்று நினது நெடிய மாயத்தன்மையினை; எமக்கும் காட்டக் கடவாயோ? - (நின்பால் அன்புடைய) எம்மனோர்க்கும் காட்டும் முறைமையினை உடையாயோ?

ஏயா உருவம் - இறையாற்றற்குப் பொருந்தாத மானுட வடிவம். காலத்தாலும் இடத்தாலும் கட்டுண்டிருக்கும் மானுடயாக்கை காலத்தாலும், இடத்தாலும் கட்டுப்படாத பரம்பொருளின் தன்மைகளைத் தாங்கும் ஆற்றலற்றதாகலின் இங்ஙனம் கூறப்பெற்றது. அல்லது வினைக்கு விளைவாகும் மானுடயாக்கை வினைத்தொடர்பற்ற பரம் பொருள் தங்கி நிற்றற்குப் பொருத்தமின்மை நோக்கியும் இங்ஙனம் கூறப்பட்டதென்க. “நின் அன்பர்களாய எமக்கும் மறைந்து நின்று நெடுமாயங்களைக் காட்டக் கடவையோ?' எனக் கேட்பது “நின் அன்பர் மாட்டும் இத்திருவிளையாடல் செய்வையோ' என்ற கருத்திலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'Cut the race of rākṣasas off at the root, end our misery and show us grace,' so
  2. we begged, and out of compassion for us you took on these forms unfit for you,
  3. and came, born in a line of protecting kings, to lift the burden from Dharma —
  4. must you, standing hidden, play out your great illusion even before us?"

What the poem says

The gods remind Irāmaṉ why he is on earth. They begged him to destroy the rākṣasas, and out of compassion he took a human body, which cannot really contain the Infinite, and was born into a royal line to lift the burden of evil from Dharma.

They ask gently why he keeps up this pretence of human weakness even in front of them, his devotees. The commentary explains that a body limited by time, space and karma is 'unfit' for the Supreme.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'arakkar kulattai vēr aṟuttu, em allal nīkki aruḷāy 'eṉṟu
irakka, emmēl karuṇaiyiṉāl, ēyā uruvam ivai eyti,
purakkum maṉṉar kuṭip piṟantu pōntāy! aṟattaip poṟai tīrppāṉ,
karakka niṉṟē, neṭu māyam emakkum kāṭṭakkaṭavāyō?