கம்பராமாயணம் 8713 · யுத்த 21.226
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பரமேட்டி! -மேலான பரம்பொருளே! அண்டம் பலவும் அனைத்து உயிரும் - அண்டங்கள் பலவற்றையும், எல்லா உயிர்களையும், அகத்தும் புறத்தும் உள ஆக்கி - (இறைவனான நினக்கு) உள்ளேயும் புறத்தேயும் உள்ளனவாகச் செய்து; உண்டும் உமிழ்ந்தும் - (உலகங்களை ஒருசேர உண்டு (வயிற்றில்) அடக்கியும் உமிழ்ந்து வெளிப்படுத்தியும்; அளந்தும் இடந்தும், உள்ளும் புறத்தும் உளை ஆகி - (நின் அடியினால்) அளந்தும், பிளந்தும் அவற்றின் உள்ளேயும் புறம்பேயும், நீக்கமற நிறைந்துள்ளாயாகி; சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய - சிலந்திப் பூச்சி தன் வாயில் மெல்லிய நூலினால் பொருந்த; கொண்டு கூடு இயற்றி - கொண்டு கூட்டினை வகுத்து (அதன் கண்தங்கி இருத்தல் போல); பண்டும் இன்றும் அமைகின்றபடியை ஒருவாய் - (உலகுயிர்களை நிலை நிறுத்தித்) தொன்மைக் காலத்தும் இக்காலத்தும் காக்கின்ற (கரக்கின்ற) நின் தன்மையினில் நீங்காது உள்ளாய்.
பரமேட்டி - உயர்ந்த நிலையில் உள்ளவன்; பரம்பொருள்; குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க் கிமையாக் குஞ்சரமும் படங்கொள் பாயும் பூவணையும் தருவாய் மதுரைப் பரமேட்டி” என்பது பரஞ்சோதி திருவிளையாடற் புராணம். உள்ளே உளை- என்றது இறைவன் உயிர்க்குயிராய்க் கலந்திருக்கும் 'அந்தர்யாமி' நிலையினை புறத்து உளை - என்றது அவனது வியாபக நிலையினை திருமால் தன்னிடத்தே உலகுயிர்களைப் படைத்து அவற்றைத் தன்னுள்ளே மீளவும் ஒடுக்கிக் கொள்ளுதற்குச் சிலந்திப் பூச்சி தன் வாயின் நூலால் கூடியற்றி அந்நூலினை மீளவும் தன்னுட்சுருக்கிக் கொள்ளுதலை உவமையாகக் கூறுவர் வைணவ சித்தாந்திகள். இதனை,
சின்னூல் பலபல வாயா லிழைத்துச் சிலந்தி பின்னும் அந்நூ லருந்தி விடுவது போல அரங்கரண்டம் பன்னூறு கோடி படைத்தவை யாவும் பழம்படியே மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே!
எனத்திருவரங்கத்து மாலை (18) யும் குறிப்பிடுதல் காணலாம். இறைவன் தான் எவ்வித மாறுபாட்டிற்கும் உட்படாமல் உலகங்களை உருவாக்கிக் காத்தும் அழித்தும் நிற்கின்ற நிலை சிலந்திப் பூச்சியின் தன்மையோடு ஒப்புமைப் படுத்துப் பேசப் பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Making the many worlds and all lives exist within you and outside you,
- swallowing and disgorging them, measuring and digging them up, being both within them and without,
- as the spider spins fine thread from its mouth and fits together its web,
- you never leave the way you abide, of old and today, O Supreme One!"
What the poem says
The gods praise Viṣṇu's cosmic deeds. He holds all worlds and beings within himself and outside himself. He swallowed the worlds at the deluge and brought them out again, measured them as Vāmana and dug the earth up from the ocean as the Boar. He dwells inside everything and pervades everything.
The commentary explains the spider image, a favourite of Vaiṣṇava teachers. As a spider spins its web from itself and draws the thread back in, God sends out the universe and takes it back without being changed. It quotes a verse from the Tiruvaraṅkattu Mālai on the same idea.