கம்பராமாயணம் 8714 · யுத்த 21.227

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முன்பு பின்பு நடு இல்லாய் -தோற்றம் நிலை இறுதி இல்லாதவனே! துன்ப விளையாட்டு இதுவேயும் - (நீ மேற்கொண்ட) இச்செயல் துன்பத்தைத் தரும் விளையாட்டாம், ஆயினும்; உன்னைத் துன்பம் தொடர்பின்மை - (இறைவனாகிய நின்னை) அத்துன்பம் தொடர்தல் இல்லாமையால்; இன்பவிளையாட்டு ஆம் - இன்பத்தைத் தரும் விளையாடலே ஆம்; எனினும் அறியாதே முக்கு இடர் - ஆயினும் (நின் இயல்பினை) அறியாதேமாகிய எங்களுக்குத் துன்பத்தையே தருவதாயிற்று; உற்றால் அன்பு விளையும்,அருள் விளையும், அறிவு விளையும் - (நீ செய்த) இச்செயலால் (எங்கள்உள்ளத்தில்) அன்பு உண்டாகும், அருள் உண்டாகும், ஞானம் உண்டாகும்; அவையெல்லாம் முடித்தால் அன்றி முடியாவே - அத்தகைய பயன்களெல்லாம் (முதல்வனாகிய நீ முன்னின்று) முடித்து வைத்தாலன்றி (எம்மிடத்து) நிறைவேறுவன அல்ல.

அன்பு - தொடர்புடையார் மாட்டுவிளைவது. அருள் என்பது அனைத்துயிர்கள் மேலும் செல்லும் கருணை. அன்பு, அருள், ஞானம் என்பவை உயிர் பெறுகின்ற வளர் நிலைக் கூறுகள். இவற்றை இறைவன் முன்னின்று முடித்துத் தருதல் வேண்டும். தொடர்புடையார் மாட்டு ஏற்படும் அன்பே அடுத்து அனைத்துயிர்கள்மேல் ஏற்படும் அருளுக்கு வித்தாகின்றது. அருளே ஞானத்திற்கு வழி வகுக்கின்றது. ஞானம் பதி உணர்வைத் தந்து வீட்டின்பத்தைக் கூட்டுவிக்கின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Though this is a play of sorrow, since sorrow has no hold on you,
  2. for you it is a play of joy; yet when trouble falls on us who do not understand,
  3. love grows, grace grows, wisdom grows; and all of these,
  4. O you who have no beginning, end or middle! will never be fulfilled unless you fulfil them."

What the poem says

Irāmaṉ's grief is a drama of sorrow, but since sorrow cannot touch God, for him it is really a play of joy. For the gods, who do not fully understand, it brings real pain, and through that pain love, grace and wisdom grow in them.

The commentary explains these as stages of the soul's growth. Love for those close to us grows into grace toward all beings, and grace leads to wisdom and liberation. Only God can bring them to completion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tuṉpa viḷaiyāṭṭu ituvēyum, uṉṉait tuṉpam toṭarpu iṉmai,
iṉpa viḷaiyāṭṭu ām; eṉiṉum, aṟiyātōmukku iṭar uṟṟāl
aṉpu viḷaiyum, aruḷ viḷaiyum, aṟivu viḷaiyum avai ellām,
muṉpu piṉpu naṭu illāy! muṭittāl aṉṟi muṭiyāvē.