கம்பராமாயணம் 8715 · யுத்த 21.228

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வருவாய் போல வாராதாய்! வந்தாயென்று மனம் களிப்ப,
வெருவாது இருந்தோம்; நீ இடையே துன்பம் விளைக்க, மெலிகின்றேம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இதனைக் களையாயேல்
திருவாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ?

பொருள் · Meaning in Tamil

வருவாய் போல வாராதாய் - (வெளிப்பட) வருவாய் போன்று தோன்றி வாராமல் இருப்பவனே! வந்தாய் என்று மனம் களிப்ப - (காணுதற்கு அரிய நீ இன்று இராமனாக அவதரித்து) வந்தாய் என்று மனமகிழ்ச்சியுறுதலால்; வெருவாதிருந்தோம் - (பகைவர் செய்யும் இடர்களுக்குச் சிறிதும்) அஞ்சாதிருந்தோம்; நீ இடையே துன்பம் விளைக்க மெலிகின்றோம் - (அச்சந்தீர்த்தருளவல்ல) நீயே (எம்மகிழ்ச்சியின்) இடையே துன்பத்தை உண்டாக்கினமையால் மெலிவுற்று வருந்துவேம் ஆயினேம்; கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! - மூலமாய் நின்று எம்மைப் பாதுகாத்தருளும் பற்றாகிய பெருமானே! நீயே இதனைக் காவாயேல் - (அருளாளனாகிய) நீயே இத்துன்பத்தைக் களையா தொழிவாயாயின்; நின்மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ? - நினது மாயச் செயல் (உணர்வற்ற) எங்களால் தீர்க்கத் தீர்ந்தொழியும் எளிமையுடையதோ?

"வந்தாய் போலே வாராதாய், வாராதாய் போல் வருவானே” என்ற திருவாய் மொழித்தொடர் (6-10-9) இங்கு ஒப்புக் காணத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "You who seem to come and yet do not come! Glad at heart that you had come,
  2. we lived without fear; now, as you bring sorrow into our midst, we waste away;
  3. O refuge who protects us as our very source! If you yourself do not guard us from this,
  4. O you on whose chest Tiru dwells, can your illusion be undone by us?"

What the poem says

God seems to come near and yet stays out of reach. The gods had rejoiced when he came down as Irāmaṉ and lost their fear of the rākṣasas, but now he has brought sorrow into their joy.

They call him the source and refuge of all beings, Viṣṇu on whose chest the goddess Tiru (Lakṣmī) lives. Only he can undo his own illusion. The commentary compares a line of Nammāḻvār: 'you who seem to come yet come not, who seem not to come yet come'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'varuvāy pōla vārātāy! vantāyeṉṟu maṉam kaḷippa,
veruvātu iruntōm; nī iṭaiyē tuṉpam viḷaikka, melikiṉṟēm;
karu āy aḷikkum kaḷaikaṇṇē! nīyē itaṉaik kāvāyēl
tiru vāḻ mārpa! niṉ māyai emmāl tīrkkat tīrumō?