கம்பராமாயணம் 8716 · யுத்த 21.229
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எம்பிரானே! -எம்முடைய இறைவனே! அம்பரீடற்கு அருளியதும் - அம்பரீடன் என்பானுக்கு அருள் புரிந்ததும்; அயனார்மகனுக்கு அளித்ததுவும் - பிரம தேவருடைய மகனான உருத்திர மூர்த்திக்கு அருள் வழங்கியதும், (ஆகிய நின் அருளை); எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவேம் - எங்களுக்கும் இப்பொழுது கொடுத்தாய் என்று (நினது) பாதுகாப்பினை நாடி அடைதற்கு உள்ள யாங்கள்; வெம்புதுயரம் நீ உழக்க - மனம் வெதும்புதற்குக் காரணமான துன்பத்தை நீ அடைந்தமையால்; வெளிகாணாது மெலிகின்றேம் - (துன்பஇருளைவிட்டுச் செல்லும்) வழிகாணாது தளர்ந்து வருந்துகின்றோம்; தம்பிதுணைவா! - தம்பிக்கு துணைவனே! நீ இதனைத் தவிர்த்து, எம் உணர்வைத் தாராயோ - நீ (மேற்கொண்டுள்ள) இத்துயரத்தை நீக்கி (உணர்விழந்த) எங்களுக்கு நல்லுணர்வினைத் தந்தருள மாட்டாயா?
ஏமுறுதல் - பாதுகாப்பினை அடைதல், வெம்புதுயரம் - கண்டோர் செய்வதறியாது மனம் வெதும்புதற்குரிய பெருந்துயர் இராமன் இலக்குவன் மீது பேரன்பினன் ஆதலால், இவ்விடம் நோக்கி “தம்பி துணைவா' என அழைக்கப் பெறுகின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "What you granted to Ampariṭaṉ, what you gave to Ayaṉ's son —
- 'Our Lord! you have granted it to us today,' so we thought, and felt secure;
- now, as you suffer burning grief, we see no way out and waste away;
- O companion of your brother! Will you not end this, and give us back our senses?"
What the poem says
The gods recall Viṣṇu's past mercies: how he protected the devoted king Ampariṭaṉ (Ambarīṣa), and how he showed grace to Rudra, son of Ayaṉ (Brahmā). They had felt sure of the same protection.
Now Irāmaṉ's grief has left them bewildered. They call him 'companion of your brother', pointing to his great love for Ilakkuvaṉ, and beg him to end this sorrow and restore their understanding.