கம்பராமாயணம் 8717 · யுத்த 21.230
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்ப பலவும் எடுத்து இயம்பி - என மேற்குறித்த பலவற்றையும் எடுத்துக்கூறி; இமையாதோரும் இடர் உழந்தார் - கண்ணிமையாதவராகிய தேவர்களும் துன்புற்று வருந்தினார்கள்; ஐயன், துன்பமனிதர் கருமமேபுரிய- இறைவனாகிய இராமன் துன்பத்தில் உழலும் மனிதர்களுக்குரிய செயல் முறையினையே புரிவதாக; முன்பு துணிந்தமையால் - தான் முன்பு துணிந்து மேற்கொண்ட அவதாரச் செய்கை காரணமாக; அன்பு மிகுதியால் ஆவி உள்ளே அடங்கினான் - (இலக்குவன் பால் வைத்து அன்பு மிகுதியால் (அவனைப் பிரிய முடியாமல்) உயிர் உள்ளே ஒடுங்கப்பெற்றான்; புன்கண் நிருதர் பெருந்தூதர் - (அதுகண்டு) துன்பஞ்செய்தலையே இயல்பாக உடைய அரக்கருடைய பெரிய தூதர்கள்; போனார், அரக்கனிடம் புகுந்தார் - போர்க்களத்தைவிட்டு நீங்கிச் சென்றவர்கள் அரக்கனாகிய இராவணன் (இருக்கும்) இடத்தை அடைந்தார்கள். மானுடவேடந்தாங்கி மண்ணுலகில் அவதரித்து வந்தமையின் மனிதருக்குரிய ஆசாபாசங்கள் அவனுக்கும் உள்ளதுபோல் காட்ட வேண்டி இராமபிரான் ஆவி உள்ளே அடங்கப்பெற்றான். இறைவனின் இவ்வெளிவந்த தன்மையை, “துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்றவண்ணம் நிற்கவே துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண்காண வந்து துயரங்கள் செய்துதன் தெய்வ நிலையுலகில் புகவுய்க்கு மம்மான் துயரமில் சரக்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோன் துன்பமிலலே! (திருவாய்மொழி - 3-10-0) என நம்மாழ்வார் பாடுவதைக் காணலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying many such things, even the unblinking gods were in distress;
- out of the depth of his love, the Lord's life withdrew deep within him,
- since long before he had resolved to do only the deeds of suffering men;
- and the great envoys of the cruel rākṣasas went off, and came before the rākṣasa king.
What the poem says
The gods' pleas change nothing. Irāmaṉ chose from the start to live fully as a suffering human being, so his love for Ilakkuvaṉ makes him sink into unconsciousness as a man would.
The commentary cites Nammāḻvār: the Lord, without losing his divine radiance, is born among sorrowing men and shares their troubles. The rākṣasa spies who saw this hurry back to Irāvaṇaṉ.