கம்பராமாயணம் 8718 · யுத்த 21.231
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கர்க்கு இறைவன் “என்வந்தது நீர்?” என்று இயம்ப -அரக்கர் வேந்தனாகிய இராவணன் (வந்த தூதர்களை நோக்கி) 'நீர் வந்தது என்ன காரணம் பற்றி?" என வினவ, நின் மைந்தன் நெடுஞ்சரத்தால் - (அது கேட்ட தூதர்) ‘நின்னுடைய மகன் ஏவிய நெடிய பிரம்மாத்திரத்தால்; துணைவரெல்லாம் நிலம் சேர- தன்னுடைய தோழர்கள் எல்லோரும் நிலத்தில் மடிந்து வீழ; பின் வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி - தன்பின்னே வந்த தம்பி இலக்குவனும் தனக்கு முன்னே இறக்க நேர்ந்தமைக்குக் காரணமாயமைந்த தனது (காலத்தாழ்வாகிய) பிழையை எண்ணி; பெருந்துயரால் முன் வந்தவனும் முடிந்தான் - பெருந்துயரால் மூத்தோனாகிய இராமனும் இறந்து போனான்; “உன்பகைபோய் முடிந்தது” என மொழிந்தார் - (அதுவே) “உனது தீராப் பகையும் அறவே தொலைந்தது' எனக் கூறினார்கள்.
இராமன் நினைவிழந்து கிடந்ததனை மரணமடைந்து விட்டதாகத் தவறாகக் கருதிய தூதுவர் இராவணனுக்கு இங்ஙனம் அறிவிக்கின்றனர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Why have you come?" asked the king of the rākṣasas. "In the clashing battle,
- by your son's long arrows all his comrades fell to the ground;
- seeing his own fault, that the one who came after him died first, in great grief
- the one who came first has died too; your enemy is gone, and finished," they said.
What the poem says
The spies report to Irāvaṇaṉ. Intiracittu's arrows have killed all the monkey leaders and Ilakkuvaṉ. They add that Irāmaṉ, blaming himself because his younger brother died before him, has died of grief, so Irāvaṇaṉ's enemy is finished.
They are wrong: Irāmaṉ has only fainted. The mistake sets up the next episode, in which Irāvaṇaṉ has Cītai shown the battlefield.