கம்பராமாயணம் 8720 · யுத்த 22.2

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்த நெறியை அவர் செய்ய - (இராவணன் இட்ட) அப்பணியினை அப்பணியாளர் இயற்ற; அரக்கன் மருத்தன் தனைக் கூவி - இராவணன் மருத்தன் என்பவனை அழைத்து; முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு - "முன்னே நீ சென்று, இறந்து கிடக்கும் அரக்கரின் உடம்புகள் எல்லாவற்றையும் கடலில் வீசுக"; நின் சிந்தை ஒழியப் பிறர் அறியின் -(இச்செய்தியை) நின் மனந்தவிரப் பிறர் யாரேனும் அறிந்தால்; சிரமும், வரமும் சிந்துவென் என்று உந்த - (நின்) தலையையும் (நீ தவத்தால் பெற்றுள்ள) வரத்தையும் சிந்தி விடுவேன் என்று கூறி அனுப்ப; அவன் போய் அரக்கர் உடல் அடங்கக் கடலினுள் இட்டான் - அந்த மருத்தன் சென்று அரக்கர் உடல் முழுவதையும் கடலில் போட்டான்.

இறந்து பட்ட இராம இலக்குவரைச் சீதைக்குக் காட்டித் தன் வெற்றிச் சிறப்பை அவள் உணர வேண்டுமென்ற எண்ண முடையனாதலின் அங்ஙனம் அவள் போர்க்களம் காணும்போது அரக்கர் எவரும் இறவாமல் இராமன் பக்கத்தாரே இறந்தொழிந்தனர் என அவள் நினைக்கும் வண்ணம் அரக்கருடல்களை மறைக்க இவ்வுபாயத்தை மேற்கொள்ளுகின்றான் ஆர்வமிகுதியால் அறிவாளியும் அறிவற்ற செயல்களைச் செய்வான் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு.

இப்பாடலின் செய்தி நாடகத் திறம் செறிந்ததாகும். மருத்து மலையின் நற்பயன் அரக்கர் சேனைக்கு வாய்க்காமல் போனது இராவணன் செயலால் ... இதுபோன்ற பல நயங்களைக் கொண்டது இப்பாடலின் செய்தி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While they carried out that order, the rākṣasa king summoned Maruttaṉ:
  2. "Go now, before anything else, and hurl every rākṣasa body into the sea; if anyone
  3. besides you comes to know of it, I will strike off your head and your boons," and
  4. sent him off; and he went and threw all the rākṣasa bodies into the sea.

What the poem says

Irāvaṇaṉ secretly orders Maruttaṉ to throw every dead rākṣasa into the sea, on pain of losing his head and his boons. He means to show Cītai the battlefield, and he wants her to see only the bodies of Irāmaṉ's side, as if no rākṣasa had died.

The commentary says even a clever man does foolish things when carried away by eagerness. The order has a dramatic consequence later. When the healing herbs of the medicine mountain revive the dead, no rākṣasa will be there to benefit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1anta neṟiyai avar ceyya, arakkaṉ maruttaṉtaṉaik kūvi
'munta nī pōy arakkar uṭal muḻutum kaṭalil muṭukkiṭu; niṉ
cintai oḻiyap piṟar aṟiyiṉ, ciramum varamum cintuveṉ' eṉṟu
unta; avaṉ pōy arakkar uṭal aṭaṅkak kaṭaliṉuḷ iṭṭāṉ.