கம்பராமாயணம் 8721 · யுத்த 22.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தெய்வ மானத்திடை ஏற்றி - (பின்பு இராவணன் சீதைக்குக் காவலாய் அமைந்த அரக்கியரை அழைத்து, நீங்கள்) சீதையைத் தெய்வத்தன்மையை உடைய புட்பக விமானத்தில் ஏற்றி; மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம் -இராமலக்குமவராகிய மனிதர்க்கு நேர்ந்த கதி எல்லாவற்றையும்; தய்யல் காணக் காட்டுமின்கள் -அவள் காணுமாறு காட்டுங்கள்; கண்டால் அன்றி, தனது உள்ளத்து, அய்யம் நீங்காள் - தன் கண்ணால் கண்டால் அல்லது தன் மனத்தின் கண்ணுள்ள ஐயப்பாடு நீங்கப்பெறாள்; என்று உரைக்க - என்று (அவ்விராவணன் கூற; அரக்க மகளிர் இரைத்து ஈண்டி -அரக்கியர்கள் ஆரவாரித்துக் கொண்டு நெருங்கி; உய்யும் உணர்வு நீத்தாளை - இவ்வுலகில் உய்ந்திருக்க வேண்டும் என்னும் உணர்ச்சியற்ற சீதையை; நெடும் போர்க் களத்தின் மிசை உய்த்தார் - நெடிய போர்க்களத்துக்கு மேலாக அழைத்துச் சென்றார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Set her in the divine aerial chariot, and all that has befallen the men
- show to the lady so that she sees it; unless she sees it with her own eyes, the doubt in her heart
- will never leave her," he said; and the rākṣasa women, clamouring, crowded round
- and carried her, who had lost all wish to live, out over the vast field of battle.
What the poem says
Irāvaṇaṉ orders the rākṣasa women who guard Cītai to put her in the flying chariot Puṣpaka and show her Irāmaṉ and Ilakkuvaṉ lying on the battlefield. Unless she sees it herself, he says, she will never stop hoping.
The guards crowd round noisily and fly her, already without any will to live, over the battlefield.