கம்பராமாயணம் 8722 · யுத்த 22.4

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கணவன் உரு கண்ணால் கண்டாள் - கணவன் உருவைச் சீதை கண்ணால் கண்டாள்; அன்றி ஒன்றும் காணாதாள் - அவ்வுருவத்தை அன்றி வேறு ஒன்றும் காணாதவள் ஆயினாள்; உண்டாள் விடத்தை என - (பின்பு) விடத்தை உண்டவள் போல; உடலும், உணர்வும், உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் - உடம்பும், உணர்ச்சியும், உயிர்ப்பும் ஒருங்கே ஓயப்பெற்றாள்; தண்டாமரைப் பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் - குளிர்ந்த தாமரைப்பூ நெருப்பில் வீழ்ந்தாற்போன்றதன்மையை அடைந்தாள்; தரியாதாள் பெண்தான் உற்ற பெரும் பீழை - (பெருந்துயரைத்) தாங்கமாட்டாதவளான சீதை என்னும் பெண் அடைந்த பெருந்துயரம்; உலகுக்கு எல்லாம் பெரிதன்றோ? - உலகங்கள் எல்லாவற்றினும் பெரியதாகும் அன்றோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She saw with her eyes the form of her husband; she saw nothing else;
  2. as if she had drunk poison, her body, her senses and her breath all failed together;
  3. she became like a cool lotus flower fallen into fire; unable to bear it —
  4. the great anguish that woman suffered, is it not greater than the whole world?

What the poem says

From the chariot Cītai sees only one thing, her husband lying on the field. She collapses as if poisoned, losing sense and breath together.

She is like a cool lotus thrown into fire. The poet says her suffering is greater than the whole world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭāḷ kaṇṇāl kaṇavaṉ uru; aṉṟi, oṉṟum kāṇātāḷ;
uṇṭāḷ viṭattai eṉa, uṭalum uṇarvum uyirppum uṭaṉ ōyntāḷ;
taṇ tāmaraip pū neruppuṟṟa taṉmai uṟṟāḷ; tariyātāḷ
peṇtāṉ uṟṟa perum pīḻai ulakukku ellām peritu aṉṟō!