கம்பராமாயணம் 8723 · யுத்த 22.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மங்கை அழலும் - (உயிரோய்ந்திருந்த) சீதை எழுந்து அழுதலும்; வான் நாட்டு மயில்கள் அழுதார் - (அவளைக்கண்டு) வானுலகத்திலுள்ள மயில் போன்ற சாயலை உடைய தேவமாதர் அழுதனர்; மழவிடையோன் பங்கின் உறையும் குயில் அழுதாள் - இளமையான எருதை ஊர்தியாகவுடைய சிவபிரானது இடப்பாகமமர்ந்த குயில் போன்றவளான உமையவள் அழுதாள்; பதுமத்து இருந்த மாது அழுதாள் - செந்தாமரை மலரில் தங்கியுள்ள திருமகள் அழுதாள்; கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் - கங்காதேவி அழுதாள், அயனார் நாவில் வீற்றிருக்கும் கலைமகள் அழுதாள்; கமலத்தடங்கண்ணன் தங்கை அழுதாள் -தாமரைமலர் போன்ற கண்களை உடைய திருமாலின் தங்கையான கொற்றவை அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் - இரங்காத வன்னெஞ்சராகிய அரக்கிமாரும் தம் வன்மை தளர்ந்து அழுதார்.
கணவனை இழந்ததாகக் கருதிச் சீதை அழும் துன்பத்தைக் கண்டு கணவனோடு வாழும் மகளிரும், மற்றையோரும் அழுதனர் என்றவாறு. கண்ணன் தங்கை - கொற்றவை வெற்றித்திருமகளான இவள் அழுததோடன்றி, சீதையைக் காவல்காப்பவரும், வன்னெஞ்சரும் ஆன அரக்கியரும் தளர்ந்து அழுதனராம். தெய்வப் பெற்றிமை உடைய தேவிமாரின் பெண்மை அவலப்பட்டது பெரிதன்று; பொதுவாக இரக்கம் கொள்ளாத அரக்கியரும்கூடச் சீதை துயர் கண்டு அழுதனராம்; அரக்கியரும் என்பது எண்ணும்மை அன்று; சிறப்பும்மையாகிறது என்பது டாக்டர் ம.ரா. போ. குருசாமி அவர்கள் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the lady wept, the peacock-like women of heaven wept; the cuckoo who dwells
- in half the body of him who rides the young bull wept; the lady who sits on the lotus wept;
- Gaṅgā wept; the lady of speech wept; the sister of the one with broad lotus eyes
- wept; and even the pitiless rākṣasa women broke down and wept.
What the poem says
When Cītai comes to and weeps, every goddess weeps with her: the heavenly women, Umā who shares Śiva's body, Lakṣmī on her lotus, the river goddess Gaṅgā, Sarasvatī the goddess of speech, and Koṟṟavai, the war goddess called Viṣṇu's sister.
Even the hard-hearted rākṣasa guards weep. The commentary stresses that it is their tears that show how great her grief is.