கம்பராமாயணம் 8724 · யுத்த 22.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன்தாழ் குழையாள் தனை ஈன்ற - பொன்னாற் செய்யப் பெற்றுக் காதில் தொங்குகின்ற குழை என்னும் அணியை அணிதற்குரியவளான சீதையைப் பெற்றதாயாகிய, பூமாமடந்தை புரிந்து அழுதாள் - பூமாதேவி எனும் பெண் மனம் இரங்கி அழுதாள்; குன்றாமறையும் தருமமும் - தன் இயல்பில் குன்றாது என்றும் ஒருதன்மைத்தாக இருக்கும் வேதங்களும் தருமமும்; மெய்குழைந்து குழைந்து விழுந்து அழுத - மெய் நெகிழ்ந்து, நெகிழ்ந்து விழுந்து அழுதன; பின்றாது உடற்றும் பெரும் பாவம் - பிற்படாமல் முற்பட்டு வந்து வருந்துகின்ற பெரும் பாவமும்; அழுதபின் என்பிறர் செய்கை - அழுதபின்பு பிறர் செய்கையை என்னென்பது?; நின்றார் நின்றபடி அழுதார் - ஆங்காங்கிருந்தவர் (மதிமயங்கி) நின்றது நின்ற வண்ணம் புலம்பினர்; நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள் - (அப்போது பிராட்டி) நினைப்பும், உயிர்ப்பும் நீத்தவளானாள்.
பாவமும் அழுதது என்ற செய்தியை முன் பாடலில் அரக்கியரும் அழுத செய்தியோடு இணைத்துக்காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great lady of the flowering earth, who bore her of the hanging golden earrings, wept in pity;
- the unfailing Vedas and Dharma, melting and melting through and through, fell down and wept;
- when even great Sin, that torments without ever drawing back, wept, what need to tell what others did?
- Those who stood there wept just as they stood; and she lost thought and breath.
What the poem says
The mourning spreads. The Earth goddess, Cītai's mother (Cītai was found in a furrow of the earth), weeps for her daughter. The Vedas and Dharma collapse in tears.
Even Sin, which never relents, weeps, so there is no need to describe anyone else. Everyone weeps where they stand, and Cītai faints again.