கம்பராமாயணம் 8726 · யுத்த 22.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குயில் அன்னாள் - குயில் போன்ற இனிய குரலுடைய சீதை; அடித்தாள் முலைமேல் வயிறு அலைத்தாள் - மார்பின்மேல் அடித்துக்கொண்டாள், வயிற்றின்மேல் அறைந்தாள்; அழுதாள்; தொழுதாள் - அழுதாள், கணவனைத் தொழுதாள்; அனல் வீழ்ந்த கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் - நெருப்பில் விழுந்த கொடிபோல உடம்பு சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள் - மனங்கொதித்தாள், பதை பதைத்தாள், நடுங்கினாள்; துடித்தாள், மின்போல் உயிர்கரப்பச் சோர்ந்தாள் - துடித்தாள், மின்னல் தோன்றி மறைவதுபோல முன்வந்த உயிர்ப்பு மீண்டும் மறையச் சோர்வுற்றாள்; சுழன்றாள்; துள்ளினாள் - மனம் சுழலப் பெற்றாள்; பின்பு துள்ளிக் குதித்தாள்; குடித்தாள் துயரை, உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள் - கணவனை இழந்த துயரைத் தன் உயிரோடும் குழைத்துக் குடித்தாள், வருந்தினாள்.
சிறு சிறு சொற்களையும் தொடர்களையும் பலவாக அடுக்கி மெய்ப்பாடு புலப்படுத்துவது கவிச் சக்கரவர்த்தியின் இலக்கிய நெறி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She beat her breasts; she struck her belly; she wept; she worshipped; like a creeper
- fallen into fire her body curled up; she seethed; she shuddered; she shook;
- she quivered like lightning; as her life hid itself away she drooped; she whirled; she leapt;
- she drank down her sorrow, kneaded with her very life; she suffered — she whose voice was like the cuckoo's.
What the poem says
Cītai's grief is shown through a rush of short verbs, each one a gesture of mourning. She beats her breast and belly, weeps, bows to her husband, curls up like a vine in fire, trembles, flickers like lightning, faints, reels and starts up.
The commentary notes that piling up short words to show emotion through the body is one of Kampaṉ's characteristic techniques.