கம்பராமாயணம் 8727 · யுத்த 22.9

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விழுந்தாள், புரண்டாள், உடலமுழுதும் வியர்த்தாள் -விழுந்தாள்; புரண்டாள், உடலமுழுதும் வியர்க்கப் பெற்றாள்; அயர்த்தாள், வெதும்பினாள் - பெருமூச்சு விட்டாள் பின்பு மனம் வெதும்பினாள்; எழுந்தாள், இருந்தாள் - பின்பு எழுந்தாள், உடனே அமர்ந்தாள்; தளிர்க்கரத்தை நெரித்தாள், சிரித்தாள், ஏங்கினாள் -தனது கரங்களை நெரித்துக் கொண்டாள், (தன் நிலையை எண்ணிச் சிரித்தாள் உடனே ஏங்கினாள்; “கொழுந்தா” என்றாள் - (இலக்குவனைப் பார்த்துக் “கொழுந்தா!” என்று கூவினாள்; “அயோத்தியர்தங்கோவே!” என்றாள் - இராமனைப் பார்த்து, 'அயோத்திநகரத்தவரின் அரசே!' என்று விளித்தாள்; “எவ்வுலகும் தொழும் தாள் அரசேயோ” என்றாள் - 'எவ்வுலகத்தவரும் வந்து தொழுதற்குரிய திருவடிகளையுடைய அரசே!' என்று அழைத்தாள்; சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள் - (அப்பெருமானின் பெருமையை நினைத்துச் சோர்ந்தாள், பின்பு வாய் திறந்து பல சொல்லி அரற்றத் தொடங்கினாள்!

இங்கும் துயருற்ற சீதையின் மெய்ப்பாடுகள் விவரிக்கப்பெற்றன. துன்ப மிகுதியின் போது அழுதலும் சிரித்தலுமாகிய முரண்பட்ட செயல்கள் நிகழ்வதியல்பு. மேலும் ஒரு உணர்ச்சியின் போது பிறிதோர் உணர்வுக்குரிய மெய்ப்பாடு தோன்றுமாயின் அவ்வுணர்வின் உச்சம் எனலாம். அஃதாவது பெருந்துயரில் சிரிப்புத் தோன்றுமாயின் துயர உணர்வின் உச்ச நிலை அதுவெனக் கூறலாம். சீதை அரற்றுதல் தொடர்ந்து வரும் பன்னிரண்டு பாடல்களில் எடுத்துரைக்கப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She fell; she rolled; she sweated all over; she swooned; she burned within;
  2. she rose; she sat; she wrung her hands, tender as young shoots; she laughed; she moaned;
  3. "Brother-in-law!" she cried; "King of the people of Ayōttī!" she cried; "O king whose feet
  4. all the worlds worship!" she cried; she sank down, and began to lament.

What the poem says

Cītai's grief goes on in quick gestures. She falls, rolls, sweats, rises, sits, wrings her hands, and even laughs. The commentary explains that in extreme grief a person may laugh, and that a sign of the opposite feeling shows the emotion at its peak.

She calls out to Ilakkuvaṉ as her brother-in-law and to Irāmaṉ as king of Ayōttī and lord of all worlds. Her lament, which follows in twelve verses, begins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḻuntāḷ; puraṇṭāḷ; uṭal muḻutum viyarttāḷ; ayarttāḷ; vetumpiṉāḷ;
eḻuntāḷ; iruntāḷ; taḷirk karattai nerittāḷ; cirittāḷ; ēṅkiṉāḷ;
'koḻuntā! 'eṉṟāḷ, 'ayōttiyartam kōvē! 'eṉṟāḷ; ev ulakum
toḻum tāḷ aracēyō! 'eṉṟāḷ; cōrntāḷ araṟṟat toṭaṅkiṉāḷ.