கம்பராமாயணம் 8730 · யுத்த 22.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடியேன் இவை காண்கிலேன் - கொடியவளாகியயான் (இராமலக்குவர்க்கு நேர்ந்துள்ள இந்த அவல நிலைமையைக் காணப்பெறேன்; நமனே - கூற்றுவனே! அடியேன் உயிரே, அருள் நாயகனே! - அடியேனுடைய உயிரே அருள் மிக்க என் நாயகனே! உயிர்கோள் முடியாய் - (அப்படிப்பட்ட என் நாயகனும் தம்பியும் வீழ்ந்து கிடக்கக் கண்டு கதறும் என் உயிரைக் கொள்ளும் செயலை முடிக்காமல், விடியா இருள்வாய் எனை வீசினையே - விடிவில்லாத இருளில் (முடிவில்லாத துன்பத்தில் என்னை வீசிவிட்டாயே! முறையோ முறையோ - இது முறையாகுமா? முறையாகுமா? (முறையன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Wretch that I am, I cannot bear to see this; you have not finished taking my life,
- O Yama! Is this right? Is this right?
- You have flung me into a darkness that will never dawn!
- O life of me, your servant! O Lord of grace!"
What the poem says
Cītai turns to Yama, god of death. He has taken her husband and his brother but left her alive, and she asks whether that is just.
He has thrown her into a darkness with no dawn, a sorrow with no end. In the last line she turns back to Irāmaṉ, calling him her life and her gracious lord.