கம்பராமாயணம் 8731 · யுத்த 22.13

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண்ணோர் உயிரே! - மண்ணுலகத்தவர்க்கு உயிர் போன்றவனே; இமையோர் வலியே! - தேவர்கட்கு (பகைவெல்வதில் வலிமையாக இருப்பவனே! கண்ணே, அமிழ்தே, கருணாகரனே - என் கண் போன்றவனே என் உயிர்க்கு அமிழ்தம் போன்றவனே, கருணையின் நிலையமே; எண்ணாமயலோடும் இருந்தது - எனக்குற்ற துன்பங்களைச் சிறிதும் எண்ணாமல், யான் இது காறும் அளவிட முடியாத காதல் மயக்கத்தோடு அரக்கர் ஊரில் உயிர் வாழ்ந்திருந்தது; நின்புண்ணாகிய மேனி பொருந்திடவோ? - நின் புண்ணான உடம்பைப் பொருந்திடத்தானோ?

சீதை ஊணுறக்கமின்றிப் பகைவர் ஊரில் வாழ்ந்திருந்தது பகைவரை வென்று புகழோடுவரும் இராமன் அழகைக் காண வேண்டும் என்னும் ஆசையால் தான் என்பதனை, முன்னும் கூறியுள்ளதால் (கம்ப. 7653) அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Was it so that I might cling to your wounded body
  2. that I lived on in a longing beyond thought?
  3. O life of those on earth! O strength of the gods!
  4. O my eye! O my nectar! O sea of compassion!"

What the poem says

Cītai stayed alive through her captivity, without proper food or sleep, only because she longed to see Irāmaṉ come in triumph. Now she asks whether she lived on only to embrace his wounded body.

She calls him the life of the world, the strength of the gods, her eye, her nectar, a sea of compassion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṇṇā mayalōṭum iruntatu niṉ
puṇ ākiya mēṉi poruntiṭavō?
maṇṇōr uyirē! imaiyōr valiyē!
kaṇṇē! amiḻtē! karuṇākaraṉē!