கம்பராமாயணம் 8733 · யுத்த 22.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
களிறே! ஐயா! - ஆண்யானைபோன்றவனே, தலைவனே உயர் கோசலைதன் உயிரோடு உய்யாள் - (நின் நிலைமையைக் கேட்டால்) உயர்ந்த பண்பினளான கோசலை தன் உயிர் உய்ந்திருக்க மாட்டாள்; இளையோர் அவர் வாழ்கிலர் - (நினக்கு) இளையவர்களாகிய அப்பரத சத்துருக்கர் (நின்னை இழந்து) உயிர் வாழ்ந்திருக்க மாட்டார்; வினை எண்ணி விடுத்த - வஞ்சனை நினைந்து நின்னைக் காட்டிற்கு அனுப்பிய; கொடுங்கய்கேசி கருத்து மெய்யே இதுவோ? - கொடிய தன்மையளான கைகேசியின் கருத்து உண்மையாகவே இது தானோ?
“கைகேசி” என்பது எதுகை நோக்கி “கய்கேசி' என நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Noble Kōcalai will not survive with her life;
- my lord! your younger brothers will not live on;
- was this, truly, the purpose of cruel Kaikēyi,
- who plotted and sent you away? O tusker!"
What the poem says
Cītai thinks of the family in Ayōttī. Irāmaṉ's mother Kōcalai will not survive the news, and his brothers Paratan and Catturukkaṉ will not live without him.
She asks bitterly whether this is what Kaikēyi, who had him banished, wanted all along. The commentary notes that the poet spells the name Kaykēci here to fit the rhyme.