கம்பராமாயணம் 8735 · யுத்த 22.17

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
"
பாட வேறுபாடு · Project Madurai reads
1"இன்று ஈகிலையேல் இறவு இவ் இடை; மான்
அன்று ஈ " எனவே பரிவோடு அடியேன்
நின்று ஈவது நின்னை நெடுஞ் செருவில்
கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ?

பொருள் · Meaning in Tamil

அன்று - அக்காலத்தில்; இன்றுமான் ஈகிலையேல் - இன்று மானைப் பிடித்துக் கொடுக்கவில்லையானால்; இவ்விடை இறவு ஈ எனவும் - இவ்விடத்து எனக்கு இறப்புத்தான்; (ஆதலால்) அம்மானைப் பிடித்துக்கொடு என வேண்டவும்; பிரிவோடு அடியேன் நின்று ஈவது - நிற்பிரிந்து அடியேன் தனித்து நின்றது; நின்னை நெடுஞ் செருவில் கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ? - நின்னை நெடிய போரில் கொல்வதோர் தீமை நினைத்தலினால் தானோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'If you do not catch it for me today, here is my death; that deer —
  2. give it to me,' I said that day; that I, your servant, stood parted from you —
  3. was it so that I might bring on you the evil
  4. of being killed in a long battle?"

What the poem says

Cītai remembers the day of the golden deer. She told Irāmaṉ she would die if he did not catch it for her, and so she was left alone and Irāvaṇaṉ carried her off.

She asks whether that separation was meant to end in his death in this long war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"iṉṟu īkilaiyēl iṟavu iv iṭai; māṉ
aṉṟu ī " eṉavum parivōṭu aṭiyēṉ
niṉṟu īvatu niṉṉai neṭuñ ceruvil
koṉṟu īvatu ōr tīmai kuṟittaliṉō?