கம்பராமாயணம் 8736 · யுத்த 22.18

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
”

பொருள் · Meaning in Tamil

மேதா! இளையோய்! - அறிவு நிரம்பியவனே! இளவரசே! விதியார் விளைவால் - விதியின் விளைவாக; போதா நெறிஎம்மொடு போதுறுநாள் - சொல்ல முடியாத காட்டு வழியில் எங்களோடு வரப்புறப்படும் நாள்; "மூது ஆனவன் முன்னம் முடிந்திடு" எனும் - "முன்னவனாகிய இராமன் இறக்கும் நிலை நேர்ந்தால், அவனுக்கு முன் நீ முடிந்திடுவாயாக” எனக் கூறிய; மாதா உரையின் வழி நின்றனையோ - நின்தாய் சுமித்திரையின் சொல்வழியே (நீ) முன்னம் இறந்தனையோ?"

மேதா- அறிவாளன்; போதா நெறி- மக்கள் நடமாட்டமற்ற காட்டு வழி. மூதானவன் - அண்ணன்.

கம்ப.[752 நினைவில் கொண்டு "மாதா உரையின் வழி நின்றனையோ என வினவுகின்றாள் சீதை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "O wise one! O younger one! By the working of fate,
  2. on the day you set out with us on the road no one walks,
  3. 'If your elder dies, you die before him,' said
  4. your mother — did you hold to her word?"

What the poem says

Cītai now speaks to Ilakkuvaṉ. When he left with them for the forest, his mother Cumittirai told him that if his elder brother were ever to die, he must die first.

Seeing him lying dead beside Irāmaṉ, Cītai asks whether he kept his mother's command to the letter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mētā! iḷaiyōy! vitiyār viḷaivāl
pōtā neṟi emmoṭu pōtuṟunāḷ
"mūtu āṉavaṉ muṉṉam muṭintiṭu ” eṉum
mātā uraiyiṉvaḻi niṉṟaṉaiyō?