கம்பராமாயணம் 8740 · யுத்த 22.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேடியதவமே அன்ன திரிசடை - சீதை முன்பு தேடிய தவப்பயன் போன்ற திரிசடை; மறுக்கம் தீர்ப்பாள் - (அப்பிராட்டியின்) மனக்கலக்கத்தை அகற்றுபவளாகி; மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கி மாரை - அவள் பக்கத்தில் சுற்றி நின்ற வளைந்த கோரப் பற்களை உடைய அரக்கியர்களை; பாடுஉற நீக்கி, நின்ற பாவையைத் தழுவிக் கொண்டு - இருபக்கமும் பிரிந்து போகுமாறு நீக்கிக்கொண்டு, (இராமன்மேல் விழும் நோக்கத்தோடு) நின்ற பாவை போன்ற சீதையைத் தழுவிக்கொண்டு; கூடினள் என்ன நின்று செவியிடை குறுகிச் சொன்னாள் - அவளோடு ஒன்றாயினாள் என்னுமாறு நெருங்கி நின்று அவள் செவியிற் சென்று சொன்னாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rākṣasa women with curving fangs who pressed close about her
- she thrust aside, and, embracing the doll-like lady who stood there,
- holding her so close they seemed one, she bent to her ear and spoke —
- Tiricaṭai, like the very fruit of the penance Cītai had sought, to end her confusion.
What the poem says
Tiricaṭai, the kind daughter of Vīṭaṇaṉ who has befriended Cītai in her captivity, steps in. She pushes the fanged guards aside, holds Cītai close and whispers in her ear.
The poet calls her the reward of Cītai's past penance, a comfort sent to her in her worst hour.