கம்பராமாயணம் 8741 · யுத்த 22.23

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும்,
போய மா நாக பாசம் பிணித்தது போனவாறும்,
நீ அமா! நினையாய்; மாள நினைதியோ? நெறி இலாரால்
ஆய மா மாயம் ஒன்றும் அறிகிலை, அன்னம் அன்னாய்

பொருள் · Meaning in Tamil

அன்னம் அன்னாய், அமா! - அன்னம் போன்ற தாயே!; மாயமான் விடுத்தவாறும் - மாரீசனாகிய மாயமானை முன் விடுத்த தன்மையும்; சனகனைவகுத்தவாறும் - மாயா சனகனை உண்டாக்கின தன்மையும்; போயநாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் - சென்ற நாளில் (இராமலக்குவன் முதலானோரைப்) பிணித்ததாகிய நாகபாசம் அழிந்துபோன தன்மையும்; நினையாய் - எண்ணிப் பார்ப்பாயாக; நெறி இலாரால் ஆய மா மாயம் ஒன்றும் அறிந்திலை - நல்ல நெறியில் செல்லாதவர்களால் (அரக்கரால்) உண்டாய பெரிய மாயச் செயல் ஒன்றையும் அறிகிலையாய்; மாளநினைதியோ? - மாண்டுபோக நினைக்கின்றாயோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "How they sent the illusory deer, how they fashioned a false Caṉakaṉ,
  2. how, on a day gone by, the serpent noose that bound them fell away —
  3. will you not think of these, mother? Do you mean to die? The great illusion
  4. worked by those who keep no right path, you have not seen through at all, you who are like a swan."

What the poem says

Tiricaṭai reminds Cītai of the rākṣasas' earlier tricks: the magic golden deer, the false Caṉakaṉ (Cītai's father) they once conjured up to frighten her, and the serpent noose that bound Irāmaṉ and Ilakkuvaṉ but later fell away.

This too may be a deception, she says. Cītai should not die before seeing through it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māya māṉ viṭuttavāṟum, caṉakaṉai vakuttavāṟum,
pōya nāḷ nākapācam piṇittatu pōṉavāṟum,
nī amā! niṉaiyāy; māḷa niṉaitiyō? neṟi ilārāl
āya mā māyam; oṉṟum aṟintilai, aṉṉam aṉṉāy