கம்பராமாயணம் 8742 · யுத்த 22.24

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்டன கனவும் பெற்ற நிமித்தமும், நினது கற்பும்,
தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும்
அண்டர் நாயகன்தன் வீரத் தன்மையும் அயர்க்கலாமோ?
புண்டரீகற்கும் உண்டோ, இறுதி இப் புலையர்க்கு அல்லால்.

பொருள் · Meaning in Tamil

கண்ட அக் கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் - நீ முன் கண்டுள்ள கனவும் பெற்றுள்ள நன்னிமித்தங்களும், நின்னுடைய கற்பின் திண்மையும்; தண்டவாள் அரக்கர் பாவச் செய்கையும் - தண்டாயுதத்தையும், வாளையுமுடைய அரக்கர் தம் பாவச் செய்கையும்; தருமம் தாங்கும் அண்டர் நாயகர் தம் வீரத்தன்மையும் - தருமத்தைத் தாங்குகின்ற இராமலக்குவரின் வீரத் தன்மையும்; அயர்க்கலாமோ? - மறக்கலாகுமோ? (மறக்கலாகாதுகாண்); இப்புலையர்க்கு அல்லால் புண்டரீகற்கும் உண்டோ இறுதி? - இப்புலையர்களாகிய அரக்கர்க்கு அழிவு உண்டாவதல்லால் உந்திக் கமலத்தை உடைய திருமாலின் அமிசமான இராமனுக்கும் அழிவுண்டாகுமோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "That dream you saw, the omens you have had, your chastity,
  2. the sinful deeds of the rākṣasas with their clubs and swords, and the valour
  3. of the lords of the heavens who uphold Dharma — can these be forgotten?
  4. Can there be an end for the Lotus One? Only for these vile ones."

What the poem says

Tiricaṭai gives more reasons for hope. There were the prophetic dream she had of Irāvaṇaṉ's fall, the good omens Cītai has seen, and the power of Cītai's chastity. The rākṣasas' sins must be punished, and Irāmaṉ and Ilakkuvaṉ uphold Dharma.

Irāmaṉ is a form of Viṣṇu with the lotus at his navel, and he cannot die. It is the wicked rākṣasas who will be destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭa ak kaṉavum peṟṟa nimittamum, niṉatu kaṟpum,
taṇṭa vāḷ arakkar pāvac ceykaiyum, tarumam tāṅkum
aṇṭar nāyakartam vīrat taṉmaiyum ayarkkalāmō?
puṇṭarīkaṟkum uṇṭō, iṟuti ip pulaiyarkku allāl.