கம்பராமாயணம் 8743 · யுத்த 22.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மண்ணில் வந்தாய் - பூமியினின்றும் தோன்றியவளே! ஆழியான் ஆக்கை தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை - சக்கரப்படைக்கு உரியவனாகிய இராமனது உடம்பில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை என்பதை; ஏழைநீ காண்டி அன்றே - மென்மையான உள்ளமுடைய நீ நேரே காண்கிறாயல்லவோ? இளையவன் வதனம் - (அம்புபட்டிருந்தாலும்) இலக்குவனின் முகம்; இன்னும் ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது - இன்னமும் ஊழி இறுதியில் தோன்றும் சூரியனைப் போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது; உயிருக்கு இன்னல் வாழியார்க்கு இல்லை - எனவே நெடிதுநாள் வாழுந்தன்மையுள்ள அவ்விருவர்க்கும் உயிருக்கு அழிவில்லை; வாளாமயங்கலை - (எனவே) அவர்கள் இறந்தார்கள் என்று வீணாக மயங்காதே!
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Not a single arrow has sunk into the body of the bearer of the discus —
- you can see that, simple one, can you not? The younger one's face even now
- shines like the sun on the day of the world's end; harm to life
- there is none for those who will long live; do not be bewildered in vain, you who came from the earth."
What the poem says
Tiricaṭai points to the evidence in front of them. No arrow has pierced Irāmaṉ's body. Ilakkuvaṉ's face, though he is covered in arrows, still glows like the blazing sun, which a corpse's face would not.
They are not dead, she says, and Cītai, born from the Earth, should not lose herself in needless grief.