கம்பராமாயணம் 8748 · யுத்த 22.30

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

முளரி நீத்தாள் - தாமரை மலரை விட்டுச் சனகன் மகளாகப் பிறந்தவளாகிய திருமகளாகிய சீதை; அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே - அன்னை போன்றவளே, நீ இதுவரை சொன்னது ஒன்றும் பழுதுபட்டதில்லை ஆதலால், உன்னையே தெய்வமாக்கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் - உன்னையே தெய்வமாகக் கொண்டு இவ்வளவு காலம் உயிரைப் போக்கிக்கொள்ளாமல் உய்ந்திருந்தேன்; இன்னம் இவ்இரவு முற்றும் இருக்கின்றேன் - இன்னும் (நின்சொல்லையே நம்பி) இந்த இரவு முழுதும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால் முன்னமே முடிந்தது அன்றே என்றனள் - இறப்பது என்பது என்னிடம் முன்னமே முடிவானது அன்றோ என்று கூறினாள்.

சுந்தரகாண்டத்துத் திரிசடை கூறிய இராமதூதுவன் வருகை முதலியன தப்பாமல் நிகழ்ந்ததாதலின் 'நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது' என்றாள். இராவணன் எடுத்துக் கொண்டு வந்தது முதல் காலம் வாய்க்கும்போது உயிர்விட வேண்டும் என்று துணிந்து விட்டாள் ஆதலின், 'இறத்தல் என்பால் முன்னமே முடிந்ததன்றே' என்றாள். உயிர் தாங்கியிருக்க உதவிய திரிசடையைத் தெய்வமாகவே மதிக்கிறாள், பிராட்டி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Mother, since nothing you have said has ever failed,
  2. taking you alone as my god, I have survived all this time;
  3. I will stay alive yet through the whole of this night; was not my dying
  4. settled long ago?” said she who left the lotus.

What the poem says

Cītai answers Tiricaṭai. She is Tirumakaḷ, the goddess Lakṣmī, who left her lotus seat to be born as Caṉakaṉ's daughter. Everything Tiricaṭai foretold earlier, such as the coming of Irāmaṉ's messenger in the Sundara book, has come true, so Cītai treats her as a god and has lived on trusting her.

She will wait out this night on that trust. But she adds that her death was decided long ago: since Irāvaṇaṉ carried her off she has resolved to give up her life when the moment comes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉai! nī uraittatu oṉṟum aḻintilatu ātalāṉē
uṉṉaiyē teyvamāk koṇṭu, ittaṉai kālam uyntēṉ;
iṉṉam iv iravu muṟṟum irukkiṉṟēṉ; iṟattal eṉpāl
muṉṉamē muṭintatu aṉṟē? ' eṉṟaṉaḷ muḷari nīttāḷ.